கடற்புலிகள்

கடற்புலிகள் (Sea Tigers) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்படைப் பிரிவாகும். இந்தப் பிரிவுக்கு கேணல். சூசை தலைமை தாங்கினார். கடற்புலிகள் இலங்கைக் கடற்படைக்கு எதிராக பல வெற்றிகரமான தாக்குதல்களை நிகழ்த்தி ஈழப் போரில் ஒரு முக்கிய பங்கு வகித்தனர்.

கடற்புலிகள் சின்னம்

கடற்புலிகள் வரலாறு

  • ஈழப்போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கடற்போக்குவரத்து முக்கியமாக இருந்து வந்தது.
  • 1984 ஆம் ஆண்டு கடற்புலிகள் அமைப்பு அமைக்கப்பட்டது.
  • 1990 களில் தாக்குதல் அணியாக வடிவம் பெற்றது.
  • மே 24, 2007 - இலங்கை கடற்படையின் நெடுந்தீவு முகாம் ஒன்று தாக்கியழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 36 இலங்கைக் கடற்படையினரும் 4 கடற்புலிகளும் பலியானதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.[1]


தாக்குதல் முறை

பல கடற்கலங்களில் அணிகளாகச் சென்று, அந்த அணிகளுக்குள் இருக்கும் சில கடற்கரும்புலிக் கலங்கள் இலக்குகளை நோக்கி சென்று முட்டி வெடித்து அழிப்பது கடற்புலிகள் தாக்குதல் முறைகளில் ஒன்று.

படத் தொகுப்பு

இவற்றையும் பார்க்க

கலைச்சொற்கள்

  • ஓட்டிகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.