கடம்பு மரம்

கடம்ப மரம் (Anthocephalus indicus, Anthocephalus Cadamba) முருகனுக்கும், திருமாலுக்கும் உரியது எனச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. கொத்தாக உருண்டு பூக்கும் இதன் மலரின் நிறம் வெள்ளை. நன்னன் என்னும் அரசனின் காவல்மரம் கடம்பு. நீரோட்டமுள்ள கரைகளில் இது செழித்து வளரும். சாமியாடும் வேலன் மட்டும் இதனை அணிந்துகொள்வான். இதன் இலைகளை மாலையாகக் கட்டி முருகனுக்கு அணிவிப்பர். இம்மரத்தின் இலைகளை கம்பளிப் பூச்சி, பட்டாம்பூச்சி, மற்றும் வரியன் பூச்சிகளும் உணவாக உட்கொள்ளுகின்றன.[2]

கடம்பு மரம்
Tree in கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா.
Close-up of flower
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Gentianales
குடும்பம்: காஃபி குடும்பம் (தாவரவியல்)
துணைக்குடும்பம்: Cinchonoideae
சிற்றினம்: Naucleeae
பேரினம்: Neolamarckia
இனம்: N. cadamba
இருசொற் பெயரீடு
Neolamarckia cadamba
(Roxb.) Bosser
வேறு பெயர்கள் [1]
  • Nauclea cadamba Roxb.
  • Anthocephalus cadamba (Roxb.) Miq.
  • Anthocephalus indicus var. glabrescens H.L.Li
  • Anthocephalus morindifolius Korth.
  • Nauclea megaphylla S.Moore
  • Neonauclea megaphylla (S.Moore) S.Moore
  • Samama cadamba (Roxb.) Kuntze
  • Sarcocephalus cadamba (Roxb.) Kurz

சங்கப்பாடல் குறிப்புகள்

  • கடம்பு புலவர் போற்றும் மரம்.[3]
  • நீர்வளப் பகுதியில் கடம்பு செழித்து வளரும்.[4]
  • அருவி ஆடிய மகளிரில் ஒருத்தி கடம்பமரத்தைப் பற்றிக்கொள்ள மற்றவர்கள் அவளது கையைப் பற்றிக்கொண்டு நீராடினர்.[5]
  • கடம்பின் மலர்க்கொத்து உருண்டு இருக்கும் [6]
  • கடம்பு காடைப் பறவை போல் பூக்கும்.[7]
  • தெய்வம் முருகப்பெருமானைக் கடம்பமர் நெடுவேள் என்பர்.[8][9][10][11][12],[13]
  • முருகன் திருவிழாவின்போது கடம்ப மரத்தில் கொடி கட்டுவர். கடம்பு கொடி யாத்து, கண்ணி சூடி, (முருகயர்வர்).[14]
  • முருகனுக்குக் கடம்பின் இலைகளால் தொடுத்த மாலை போடுவர். கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல் - புறம் 23-3
  • கடம்பன் என்னும் சொல் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்னும் நால்வகை முதுகுடிகளில் ஒன்று.[15]
  • வெறியாட்டு நிகழ்த்தும் வேலன் கடப்பமலர் அணிந்திருப்பான்.[16]
  • குறமகள் முருகாற்றுப்படுக்கும் இடங்களில் ஒன்று [17]
  • இமயவரம்பன் நெடுஞ்சேரலாரன் பகைவனின் கடம்ப-மரத்தை வெட்டி முரசு செய்துகொண்டான்.[18]
  • களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் கடம்பின் பெருவாயில் நன்னனை அதித்தான்.[19]
  • ஆலமரம், கடம்பு, ஆற்றுநடுத் தீவு (திருவரங்கம்), (இருங்)குன்றம் ஆகிய இடங்களில் திருமால் குடிகொண்டுள்ளான்.[20]

கடம்ப மரமும், மதுரையும்

முற்காலத்தில் மதுரை கடம்ப மரங்களின் சோலையாக இருந்தது என்றும், இந்த மரங்களை அழித்துத் தான் மதுரை நகரம் தோன்றியதாகவும் இந்த காரணத்தாலேயே மதுரைக்கு கடம்பவனம் என்ற பெயர் உண்டு என்றும் தலபுராண அடிப்படையில் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[21] இந்த கடம்ப மரம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலவிருட்சமாகும். மீனாட்சி அம்மனுக்கு கடம்பவனவாசினி மற்றும் கடம்பவனபூவை என்ற திருபெயர்கள் உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிக்குள் சொக்கநாதர் சன்னதி அருகில் பல நூறு ஆண்டு பழமை வாய்ந்த கடம்ப மரம வெள்ளி தகடு போர்த்திப் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மருதத்துறை என்பதே மருவி மதுரை ஆயிற்று.

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

  1. "Neolamarckia cadamba". World Checklist of Selected Plant Families. Royal Botanic Gardens, Kew. பார்த்த நாள் 2013-09-01.
  2. விரியும் கிளைகள் 19: உண்மையான கடம்ப மரம்? தி இந்து தமிழ் 27 பிப்ரவரி 2016
  3. புலவரை அறியாத புகழ் பூத்த கடம்பு (அமர்ந்தவன் முருகவேள்) பரிபாடல் 19-2,
  4. நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த துறுநீர்க் கடம்பு - சிறுபாணாற்றுப்படை 69
  5. குறிஞ்சிப்பாட்டு 176
  6. உருள் இணர்க் கடம்பு - பரிபாடல் 21-11,50
  7. வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன … குறும்பூழ் - பெரும்பாணாற்றுப்படை 203
  8. பெரும்பாணாற்றுப்படை 75
  9. கடம்பின் சீர்மிகு நெடுவேள் பேணித் தழூஉப் பிணையூஉ - மதுரைக்காஞ்சி 614
  10. கார் கடப்பந்தாரன் எங் கடவுள் – சிலப்பதிகாரம் 24 பாட்டிமடை வெறிவிலக்கல்
  11. மணிமேகலையைக் காமுற்ற உதயகுமரன் ‘காரமர் கடம்பன் அல்லன்’ என விளக்கப்படுகிறான். மணிமேகலை 4-49
  12. உருவிணர்க் கடம்பின் ஒலி தாரோய் பரிபாடல் 5-81
  13. அகநானூறு 138-11,
  14. அகநானூறு 382-3,
  15. துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கு அல்லது குடியும் இல்லை - புறநானூறு 335
  16. கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட - நற்றிணை 34
  17. புதுப்பூங் கடம்ப மரத்தடி திருமுருகாற்றுப்படை -225
  18. பதிற்றுப்பத்து 11-12, பதிற்றுப்பத்து 12-3, பதிற்றுப்பத்து 17-5, பதிற்றுப்பத்து 20-4, பதிற்றுப்பத்து 88-6, அகநானூறு 127-4, அகநானூறு 347-4,
  19. பதிற்றுப்பத்து பதிகம் 4-7,
  20. பரிபாடல் 4-67,
  21. http://www.thehindu.com/news/cities/chennai/chen-arts/chen-music/madurai-through-a-fish-eyed-lens/article4238705.ece

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.