கடமையின் எல்லை

கடமையின் எல்லை 1966 ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட ஒரு ஈழத்துத் திரைப்படம். யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம். வேதநாயகத்தினால் தயாரிக்கப்பட்டது. இது ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட சரித்திரப்படம் ஆகும்.

கடமையின் எல்லை
இயக்கம்எம். வேதநாயகம்
தயாரிப்புஎம். வேதநாயகம்
கதைவில்லியம் ஷேக்ஸ்பியர்
திரைக்கதைவித்துவான் ஆனந்தராயர்
இசைஎம். வேதநாயகம்
நடிப்புதேவன் அழகக்கோன்
எம். உதயகுமார்
பொனி ரொபேர்ட்ஸ்
ஏ. ரகுநாதன்
ஐராங்கனி
ஜி. நிர்மலா
ஆர். அமிர்தவாசகம்
எஸ். ரி. அரசு
கே. துரைசிங்கம்
ஆர். காசிநாதன்
எஸ். பஸ்தியாம்பிள்ளை
ஒளிப்பதிவுஎம். ஏ. கபூர், ஏ. ரீ. அரசு
விநியோகம்கலாபவன பிலிம்ஸ்
வெளியீடு1966
நாடுஇலங்கை
மொழிதமிழ்

இத்திரைப்படத்தில் தேவன் அழகக்கோன், எம். உதயகுமார், ஏ. ரகுநாதன், ஜி. நிர்மலா, பொனி ரொபேர்ட்ஸ் முதலானோர் நடித்தார்கள். தயாரிப்பாளர் எம். வேதநாயகம் இத்திரைப்படத்தை இயக்கியதோடு, இசையமைப்பையும் பொறுப்பேற்றுக்கொண்டார். வித்வான் ஆனந்தராயர், பஸ்தியாம்பிள்ளை, எம். விக்டர் ஆகியோர் திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதினார்கள். வி. முத்தையா, கமலலோஜனி, அம்பிகா தாமோதரம், புவனேஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஷேக்ஸ்பியரின் "ஹாம்லெட்" நாடகத்தின் நேரடித் தழுவல்தான் இக்கதை. இன்பரசன் (தேவன் அழகக்கோன்) என்பவன் தன் அண்ணனைக் கொன்று அரசபதவியை அபகரிப்பதோடு, அவனது மனையாளையும் (ஐராங்கனி) மணந்து கொள்கிறான். இளவரசனான் கமலநாதனிடம் (பொனி ரொபேர்ட்ஸ்) கொலை செய்யப்பட்ட அவனது தந்தையின் ஆவி அருபமாக வந்து, நடந்ததைச் சொல்லி, சிறிய தகப்பனை பழி வாங்கச் சொல்கிறது. இறுதியில் தாய், கமலநாதன், அன்பரசன் எல்லோருமே இறந்து போகிறார்கள்.

துணுக்குகள்

  • யாழ்ப்பாணம் டச்சுக் கோட்டையைச் சுற்றிய பகுதிகளில் குதிரையோட்டம் முதலான காட்சிகளை எடுத்திருந்தார்கள்.
  • தயாரிப்பாளர் - இயக்குனரான எம். வேதநாயகம் இத்திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னரே காலமாகி விட்டார்.
  • இத்திரைப்படத்தில் கதாநாயகன் கமலநாதனாக நடித்தவர் இலங்கையில் கராத்தே கலையை பிரபலமடையச் செய்தவரான கிறான்ட் மாஸ்டர் பொனி ரொபேர்ட்ஸ். மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்முனையைச் சேர்ந்தவர்.
  • இணை ஒளிப்பதிவாளராகப் பங்காற்றிய கலஞர் எஸ். ரி. அரசு (திருநாவுக்கரசு) நடிகர், நிழல்படப்பிடிப்பாளர் என்பதோடு ஒப்பனைக் கலஞருமாவார்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.