ஓ. எஸ். மணியன்

ஓ. எஸ். மணியன் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஓரடியம்புலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், பாரதி, வாசுகி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.[2] இவர் 1995 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டுவரை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் சார்ந்த அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக பதவி வகித்து உள்ளார். வேதாரண்யம் தொகுதியிலிருந்து, 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு கைத்தறித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

ஓ. எஸ். மணியன்
பிறப்பு29 ஏப்ரல் 1954 (1954-04-29)[1]
ஓரடியாம்புலம், தலைஞாயிறு, நாகப்பட்டினம், தமிழ்நாடு[1]
இருப்பிடம்நாகப்பட்டினம் & புது தில்லி, இந்தியா[1]
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்காதர் மொகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம், தமிழ்நாடு[1]
பணிஅரசியல்வாதி, விவசாயி
செயல்பட்ட 
ஆண்டுகள்
1995 - முதல்
சொந்த ஊர்ஓரடியாம்புலம், தலைஞாயிறு, நாகப்பட்டினம், தமிழ்நாடு
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்[1]
பெற்றோர்சோமுத்தேவர் (தந்தை) & காசாம்பு அம்மாள் (தாய்)[1]
வாழ்க்கைத்
துணை
கலைச்செல்வி [1]
பிள்ளைகள்02

கல்வி

மணியன் இளங்கலை சட்டம் பயின்றுள்ளார்

வகித்த பதவிகள்

#தொடக்கம்வரைபதவி
119952001உறுப்பினர், ராஜ்ய சபா
220092014உறுப்பினர், 15வது மக்களவை
331 ஆகத்து 200930 ஏப்ரல் 2014உறுப்பினர், வர்த்தகக் குழ
431 ஆகத்து 200930 ஏப்ரல் 2014உறுப்பினர், மின்சாரக் குழு
523 செப்டம்பர் 200930 ஏப்ரல் 2014உறுப்பினர், சட்டக் குழு
6201623 மே 2016– தற்போதுஉறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
7201623 மே 2016–தற்போதுஅமைச்சர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை

மேற்கோள்கள்

  1. "Biography". Lok Sabha Website. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4550.
  2. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி (2016 மே 31). பார்த்த நாள் 31 மே 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.