ஒளியியல் தோற்றப்பாடு

ஒளி, பொருளுக்கு இடையிலான இடைத்தாக்கத்தினால் தோன்றும் அவதானிக்கப்படக்கூடிய நிகழ்வு, அல்லது தோற்றப்பாடு ஒளியியல் தோற்றப்பாடு எனப்படும். வானவில், கானல் நீர், வடமுனை ஒளி என்பன அடிக்கடி நிகழும் ஒளியியல் தோற்றப்பாடுகளுக்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். பொதுவான ஒளியியல் தோற்றப்பாடுகள் சூரியனிலிருந்து அல்லது சந்திரனிலிருந்து வரும் ஒளிக்கும், வளிமண்டலம், முகில், மழை, நீர், தூசு போன்றவற்றிற்கும் இடையிலான இடைத்தாக்கத்தினால் உருவாகின்றன.

360 பாகை (அலகு) வளைவைக் காட்டும் மூடுபனி வில் (Fogbow)

பல்வேறு வகைப்பட்ட ஒளியியல் தோற்றப்பாடுகள் அவதானிக்கப்பட்டு வருகின்றன.

வானவில்லானது மழைத்துளிகளினூடாக நிகழும் ஒளித்தெறிப்பினால் நிகழ்வது போலவே, மூடுபனியூடாக நிகழும் ஒளித்தெறிப்பினால், மூடுபனி வில் தோற்றப்பாடு நிகழ்கின்றது. Sundog என அழைக்கப்படும் ஒளியியல் தோற்றப்பாட்டில், சூரியனுக்கு இரு புறமாகவும், ஒளிதரும் வளையம் போன்ற தோற்றமும், அந்த வளையத்தில் மிகப் பிரகாசமான ஒளிப் புள்ளிகளும் தோன்றும்.

படங்களின் தொகுப்பு

வெளி இணைப்பு

Atmospheric Optical Phenomena[1]

மேற்கோள்கள்

  1. "Atmospheric Optical Phenomena". Compiled by Paula Wellington. Trinidad and Tobago Meteorological Services. பார்த்த நாள் ஆகஸ்ட் 06, 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.