ஒலாண்டா உமாலா

ஒலாண்டா உமாலா (Ollanta Humala, பிறப்பு: சூன் 26, 1962) பெருவின் அரசியல்வாதி. முன்னாள் இராணுவ அதிகாரியான இவர் 2006 ஆம் ஆண்டு அரசுதலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2011 ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ர தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு முதற்சுற்றில் 31% வாக்குகளைப் பெற்றார்[1]. சூன் 2011 இல் இடம்பெற்ற இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் 51.6% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

ஒலாண்டா உமாலா
Ollanta Humala
2006 இல் உமாலா
பெருவின் அரசுத்தலைவர்
பதவியேற்பு
28 சூலை 2011
துணை குடியரசுத் தலைவர் மரிசோல் எஸ்பினோசா
முன்னவர் அலன் கார்சியா
பெரு தேசியவாதிகளின் கட்சி தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
நவம்பர் 2005
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 26, 1962 (1962-06-26)
லிமா, பெரு
அரசியல் கட்சி பெர் தேசியவாதிகளின் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) நாடின் எரெடியா
படித்த கல்வி நிறுவனங்கள் கோரிலோசு இராணுவக் கல்லூரி
பொண்டிபீசியா கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், பெரு
தொழில் அரசியல்வாதி
முன்னாள் இராணுவ அதிகாரி
சமயம் கத்தோலிக்க திருச்சபை
இணையம் இணையத்தளம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு பெரு
கிளை இராணுவம்
பணி ஆண்டுகள் 1980–2005
தர வரிசை லெப். கர்னல்

பெரு இராணுவத்தில் 1982 இல் இணைந்த உமாலா லெப்டினண்ட் கேர்ணல் தரத்துக்குப் பதவி உயர்வு பெற்றார். 1992 இல் பெருவில் "பளபளப்பான வழி" (Shining Path) என்ற மாவோயிசப் போராளி அமைப்புக்கெதிரான உள்நாட்டுப் போரிலும், 1995 இல் எக்குவடோர் நாட்டுக்கு எதிரான செனெப்பா போரிலும் பங்குபற்றினார். 2000 ஆம் ஆண்டு அக்டோபரில், அரசுத்தலைவர் அல்பேர்ட்டோ ஃபுஜிமோரிக்கு எதிரான தோல்வியடைந்த இராணுவக்கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இக்கிளர்ச்சி பெருவின் தெற்கு நகரான டாக்னாவில் இடம்பெற்றது. 39 இராணுவத்தினர் பங்குபற்றினர். ஒரு இராணுவத்தலைவரைரும், நான்கு சுரங்கத் தொழிலாளர்களையும் இவர்கள் கடத்தியிருந்தனர். ஃபுஜிமோரியின் ஆட்சி பின்னடைவை அடையத் தொடங்கிய காலத்தில் இவருக்கு பெருவின் மேலவையால் மன்னிப்பு வழங்கப்பட்டது.

2005 ஆம் ஆண்டில் பெரு தேசியவாதிகளின் கட்சியை ஆரம்பித்து அரசியலுள் நுழைந்து 2006 ஆம் ஆண்டு அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவதாக வந்து அலன் கார்சியாவிடம் தோல்வியடைந்தார். பின்னர் 2011 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு எதிராக முன்னாள் அரசுத்தலைவர் அல்பேர்ட்டோ ஃபுஜிமோரியின் மகள் கெய்க்கா ஃபுஜிமோரி போட்டியிட்டார்[2].

மேற்கோள்கள்

  1. த கார்டியன், 11 ஏப்ரல் 2011, Peru elections: Fujimori and Humala set for runoff vote
  2. Peru election winner Humala congratulated by rival, பிபிசி, சூன் 7, 2011
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.