ஒகாடன் வேலமரம்
ஒகாடன் வேலமரம் (அறிவியற் பெயர்: அக்கேசியா ஃவுமோசா, Acacia fumosa) கிழக்கு ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியா நாட்டின் கிழக்கு எல்லைப்பகுதியிலும் [சோமாலியா]] நாட்டுக்கு மேற்கேயும் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஒகாடன் என்னும் இடத்தில் பரவலாகக் காணப்படும் ஒருவகையான வேலமரம். இம்மரத்தின் பூக்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் நீண்ட கொத்தாக உள்ளன. இம்மரத்தைப் பற்றி அறிவியல் உலகம் மிக அண்மைக் காலம் வரை ஏதும் அறியாது இருந்தது. இம் மரத்தை சுவிட்சர்லாந்ததைச் சேர்ந்த தாவரவியலாளர் மாட்ஃசு தூலின் (Mats Thulin) என்பார் மே 2006, பிப்ரவரி 2007 ஆகிய காலப்பகுதியில் ஆய்வு செய்தபொழுது கண்டுபிடித்து நோர்டிக் தாவரவியல் ஆய்விதழில் 2008 இல் ஆய்வுக்கட்டுரையாக வெளியிட்டார்[1]. இதனை சயன்சு (Sceince) என்னும் அறிவியல் ஆய்விதழ் முதன் முறையாக தன் ஏப்ரல் 24, 2009 பதிப்பித்தது[2] . ஏறத்தாழ 8000 சதுர கிலோமீட்டர் பரப்பில் மிகப் பரவலாக வளரும் ஒரு பொது மரம் அறிவியலில் விளக்கப்படாது இருந்தது வியப்பானது என்று அறிவியலர் கருதுகிறார்கள். இப்பகுதியில் மக்களிடையே சண்டைகள் அவ்வப்பொழுது நடக்கின்றன என்பதையும் குறிக்கிறார்கள்.

இம்மரம் ஏறத்தாழ 6 மீட்டர் உயரம் வளர்கின்றது, இம்மரத்தின் இளஞ்சிவப்பு நிறப் பூக்கள் டுக்காக நீண்ட ஓர் அச்சில் உருளை வடிவில் அமைந்துள்ளன. குடை வேலமரம் போல் தலைப்பகுதி விரிந்து உள்ளது. இம்மரம்
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
- M. Thulin, Nordic Journal of Botony, vol 25, p.272, 2008
- David J. Mabberley, "Exploring Terra Incognita", Science, vol.324, 24 April 2009, p.472