ஐராவதி ஆறு

ஐராவதி ஆறு (Ayeyarwady River) மியான்மாரின் மிக நீளமான ஆறு ஆகும். இது 2170 கிமீ (1350 மைல்) நீளம் உடையது. இது மியான்மரின் வட தெற்காக ஓடுகிறது; மிக முதன்மையான வணிக நீர்வழித் தடமாகவும் உள்ளது.[1]

ஐராவதி
Irrawaddy
நாடு மியான்மார்
முதன்மை
நகரங்கள்
மண்டலே, பகான், பாமோ
நீளம் 2,170 கிமீ (1,348 மைல்)
வடிநிலம் 4,11,000 கிமீ² (1,58,688 ச.மைல்)
முதன்மை மூலம் மாலி ஆறு
Other source N'Mai
கழிமுகம் இந்தியப் பெருங்கடல்
ஐராவதி ஆறு மியான்மாரில் பாயும் வழிப்பாதையைக் காட்டும் வரைபடம். ஆறு வடக்கு-தெற்காக ஓடி வங்காள விரிகுடாக் கடலில் கலக்கின்றது
ஐராவதி ஆறு மியான்மாரில் பாயும் வழிப்பாதையைக் காட்டும் வரைபடம். ஆறு வடக்கு-தெற்காக ஓடி வங்காள விரிகுடாக் கடலில் கலக்கின்றது

மியான்மாரின் வட உச்சியில் தொடங்கி அதனை கிழக்கு, மேற்காக இரு கூறுகளாக பிரித்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இவ்வாறு வளமையான ஐராவதி கழிமுகத்தை உருவாக்கியுள்ளது.

இது முன்னர் மண்டலேவுக்கான பாதை என்று அழைக்கப்பட்டது.

2008 இல் வீசிய நர்கீஸ் புயலால் ஐராவதி கழிமுகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி ஏறத்தாழ 1,00,000 மக்கள் உயிர் இழந்தனர்.

மேற்கோள்கள்

  1. Irrawaddy River
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.