இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1டி

ஐஆர்என்எஸ்எஸ் 1-டி (IRNSS-1D) [3] என்பது இந்திய பிராந்திய ஊடுருவல் துணைக்கோள் வரிசையில் நான்காவதாக ஏவப்படுவதாகும். இதற்கு முன்னர் இதேபோல் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி, என்று மூன்று வகைகள் ஏவப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9 ஆம் திகதியில் ஏவப்பட வேண்டிய இது தொழில் நுட்பக்காரணங்களினால் மார்ச் 28[4] ஆம் திகதி மாலை 5 மணி 19 நிமிடங்களுக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் இக்கோள் புவிநிலைச் சுற்றுப்பாதையில்[5] நிறுத்தப்படும். இச்செயற்கைக்கோள் ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதியான ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி.-சி27 மூலம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.[6]

ஐஆர்என்எஸ்எஸ் 1-டி
திட்ட வகைசெய்மதி இடஞ்சுட்டல்
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
திட்டக் காலம்10 ஆண்டுகள்
விண்கலத்தின் பண்புகள்
பேருந்துஐ-1கே
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நடுவம்
விண்வெளிப் பயன்பாடுகள் மையம்
ஏவல் திணிவு1,425 கிலோகிராம்கள் (3,142 lb)
திறன்1,660 வாட்டு
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்மார்ச் 28, 2015 [1]
ஏவுகலன்பிஎஸ்எல்வி-சி-27[2]
ஏவலிடம்சதீஸ் தவான் விண்வெளி மையம் சதீஸ் தவான் முதல் ஏவுதளம்
ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்-இஸ்ரோ
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemபுவி மைய வட்டப்பாதை
சுற்றுவெளிபுவிநிலைச் சுற்றுப்பாதை

செலவு

இந்த திட்டத்திற்காக மொத்த செலவு 1,400 கோடிகள்.[7]

மேலும் பார்க்க

இதையும் பார்க்கவும்

மேற்கோள்

  1. "IRNSS-1D Launch Rescheduled for March 28". GPS World. பார்த்த நாள் 2015-03-11.
  2. "PSLV-C27/IRNSS-1D Mission". ISRO. பார்த்த நாள் 2015-03-02.
  3. ஐஆர்என்எஸ்எஸ் 1-டி விண்ணில் ஏவ கவுன்ட் டவுண் தொடக்கம்
  4. "பி.எஸ்.எல்.வி-சி27, ஐஆர்என்எஸ்எஸ்-1டி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது". ISRO. www.isro.gov.in. பார்த்த நாள் 31 March 2015.
  5. "IRNSS". space.skyrocket.de. பார்த்த நாள் 6 December 2014.
  6. "IRNSS 1-D launch put off". India. thehindu.com. பார்த்த நாள் 4 March 2015.
  7. Dennis S. Jesudasan. "Countdown to IRNSS 1D on March 7". The Hindu. பார்த்த நாள் 28 March 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.