ஏஞ்சல் அருவி

ஏஞ்சல் அருவி என்பது வெனிசுவேலா நாட்டில் அமைந்துள்ள ஒரு அருவி ஆகும். உலகின் மிக உயரமான தடையின்றி வீழும் அருவியான இது 979 மீட்டர் (3,212 அடி) உயரமும் 07 மீட்டர் (2,648 அடி) வீழ்ச்சியும் கொண்டுள்ளது. இது வெனிசுவேலா நாட்டின் பொலிவர் மாநிலத்தில் உள்ள கனைமா தேசியப் பூங்காவில் அமைந்துள்ள ஆயன்-டெபுய் என்ற மலையின் விளிம்பில் இருந்து வீழ்கிறது..

ஏஞ்சல் அருவி
ஏஞ்சல் அருவி, பொலிவர் மாநிலம், வெனிசுலா
Location in Venezuela
அமைவிடம்கனைமா தேசியப் பூங்கா, பொலிவர் மாநிலம், வெனிசுலா
மொத்த உயரம்979 m (3,212 ft)
வீழ்ச்சி எண்ணிக்கை2
நீளமான வீழ்ச்சியின் உயரம்807 m (2,648 ft)
உயரம், உலக நிலை1[1]

இந்த அருவியின் முன்பு முதன்முதலில் பறந்தவர் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஜிம்மி ஏஞ்சல் என்பவர் ஆவார். ஆகவே அவரது நினைவாக இது ஏஞ்சல் அருவி என்ற பெயர் பெற்றது. மேலும் அவரது அஸ்தி ஏஞ்சல் அருவியில் கரைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "Angel Falls". Encyclopædia Britannica. (17 November 2014). அணுகப்பட்டது 22 May 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.