ஏ. எல். வேணுகோபால்
மருத்துவர் ஏ. எல். வேணுகோபால் (Dr.A. L. Venugopal) சிறுநீரக அறுவையியல் (urology) நிபுணர். இவர் மருத்துவர் ஆற்காடு இலட்சுமணசுவாமி முதலியாரின் மகன் ஆவார்.
1967 ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கல்லூரிகளிலேயே முதல் முறையாக சிறுநீரக அறுவையியல் துறையைச் சென்னை மருத்துவக் கல்லூரியில் இவர் துவங்கினார். அதுமட்டுமின்றி சென்னைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்ட மேற்படிப்பிற்கான தனித் துறைகளும் இவரது தலைமையிலேயே துவங்கப்பட்டன.[1]
மேற்கோள்கள்
- "தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வலைத்தளத்தில் உள்ள தகவல்". பார்த்த நாள் April 07, 2012.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.