எல்டன் மேயோ
எல்டன் மேயோ (George Elton John Mayo, டிசம்பர் 26, 1880 - செப்டம்பர் 7, 1949) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு உளவியலாளர் மற்றும் மெய்யியலாளர். இவர் தொழிற்துறை அமைப்பில் உழைக்கும் பணியாளர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்கு ஹாதோர்ன் ஆய்வுகள் என்று பெயர். இந்த ஆய்வு முடிவானது மேலாண்மையியலில் மனித உறவுகள் கொள்கை (Human Relations Theory) எனும் புதிய பிரிவுக்கு வழி வகுத்தது. இதனால் இவர் மனித உறவுகள் கொள்கையின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
எல்டன் மேயோ | |
---|---|
பிறப்பு | திசம்பர் 26, 1880 அடிலெயிட், ஆஸ்திரேலியா |
இறப்பு | 7 செப்டம்பர் 1949 கில்ட்ஃபோர்ட், சர்ரே, ஐக்கிய இராச்சியம் |
பணி | உளவியலாளர், தொழிற்துறை ஆராய்ச்சியாளர், நிறுவன கோட்பாட்டாளர் |
வாழ்க்கைத் துணை | டோரோதியா மக்கோனெல் குழந்தைகள்: பாட்ரிசியா மற்றும் கேல் |
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் 1919 - 1923 காலத்தில் பணியாற்றிய இவர் பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். 1926 முதல் 1947 வரை ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.
எழுதிய நூல்கள்
- The Human Problems of an Industrial Civilization (1933)
- The social problems of industrial civilization (1945)
- The political problems of industrial civilization (1947)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.