எல் நீனோ-தெற்கத்திய அலைவு

எல் நீனோ-தெற்கத்திய அலைவு (ENSO-El Niño-Southern Oscillation) கடல் , வளிமண்டல சுழற்சியில் ஏற்படும் வெப்பம், காற்றின் மாறுதல்கள் மற்றும் அதனால் எற்படும் விளைவுகளால் உலக நாடுகளில் உள்ள சில பகுதிகளில் பருவநிலைகளில் பாதிப்புக்களை உண்டாக்கும் ஒர் நிகழ்வுகள் ஆகும்.இது ஒரு இணைப் பெருங்கடல் வளிமண்டலத் தோற்றப்பாடு ஆகும். எல் நினோ, லா நினா எனப்படும் இவைகள்.சிலி –பெரு நாடுகளின் கரைக்கு அருகில் கடல் வெப்பநிலையை மற்றும் மழைபொழிவுகளை உயர்த்துவது, குறைப்பது, போன்ற நிகழ்வுகளல் கடல் நீரோட்டங்கள் பாதிக்கப்டுகின்றன. மற்றும் கிழக்குப் பசிபிக் பெருங்கடல் மேற்பரப்பில் இடம்பெறும் முக்கியமான வெப்பநிலை ஏற்றத்தாழ்வுகள். எல் நினோ என்பது எஸ்பானிய மொழியில் சிறுவன் என்னும் பொருள் கொண்டது. இப்பெயர் குழந்தை யேசுவைக் குறிப்பது. இத் தோற்றப்பாடு தென்னமெரிக்காவின் கரையோரப் பகுதிகளில் நத்தார் காலங்களில் ஏற்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது. லா நினா என்னும் சொல் சிறுமி என்னும் பொருளுடையது. 1923 ஆம் ஆண்டில் சர். கில்பர்ட் தாமஸ் வாக்கர் என்பவர் இவற்றை முதன் முதலாக விளக்கினார்.

தென் பசிபிக் பெருங்கடலுக்குள் நடக்கும் சராசரி நீரோட்டத்தைக்காடும் படம்

எல் நீனோ-தெற்கத்திய அலைவு, உலகின் பல பகுதிகளிலும் ஏற்படும் வெள்ளம், வறட்சி போன்ற பல இடையூறுகளுடன் தொடர்புள்ளது. இத் தாக்கங்களும், இதன் ஒழுங்கற்ற தன்மையும் இவற்றை பற்றிக் கூறுவது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறது .ஸ்டீபன் செபியாக், மார்க் கேன் போன்றோர் இதனை ஆராய்த்து இதன் தாக்கம் பற்றிய எதிர் விளைவுகளை கூறுவது மற்றும் உலகின் பல நாடுகளின் பாதிப்புகளின் தடுப்பது போன்றவற்றை கூறி பெரும் பங்களிப்புக்களைச் செய்துள்ளனர்.[1]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. gaillardet,J,Dupre ,B. Louvat p.allegre, C.J(1996) Goobal sillicate weathring and consumapation rates reduce
  2. pantG.B andK.R kumar1997:climates ofsouth asia jhonewiley & sonsLtd.west sussex.UK. 320pp
  3. http://www.space.com/10187-sun-cycle-climate-change.html
  4. world meteorological organisation Geneva switzerland yerai2001
  5. Collins, M.1999: The El-Nino southern oscillation in the second Hadley center coupled model and it response to greenhouse warming .J.climate
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.