எரெடிவிசி

எரெடிவிசி (Eredivisie, ) என்பது நெதர்லாந்து நாட்டின் உச்சகட்ட கால்பந்துக் கூட்டிணைவுப் போட்டித்தொடராகும். இதனை டச்சு அரச கால்பந்துச் சங்கம் நடத்துகின்றது. தொழில்முறை கால்பந்து விளையாட்டு தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1956-ஆம் ஆண்டில் எரெடிவிசி ஆரம்பிக்கப்பட்டது. 2011-12 பருவம் முடிந்த பிறகு ஐரோப்பாவில் ஒன்பதாவது சிறந்த கால்பந்துக் கூட்டிணைவாக யூஈஎஃப்ஏ குணகம் கொண்டு தரவரிசை கொடுக்கப்பட்டது.

எரெடிவிசி
நாடுகள் நெதர்லாந்து
கால்பந்து
ஒன்றியம்
ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்
தோற்றம்1956
அணிகளின்
எண்ணிக்கை
18
Levels on pyramid1
தகுதியிறக்கம்ஈர்ஸ்டே டிவிசி (Eerste Divisie)
உள்நாட்டுக்
கோப்பை(கள்)
டச்சு அரச கால்பந்துச் சங்கக் கோப்பை
யோகன் கிரையொஃப் கேடயம்
சர்வதேச
கோப்பை(கள்)
யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு
யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு
தற்போதைய
வாகையர்
அயாக்சு
(2012–13)
அதிகமுறை
வாகைசூடியோர்
அயாக்சு (32)
தொலைக்காட்சி
பங்குதாரர்கள்
Fox Sports Eredivisie
NOS (Highlights)
இணையதளம்Eredivisie.nl
2013–14 எரெடிவிசி

எரெடிவிசி கூட்டிணைவில் மொத்தம் 18 அணிகள் பங்கேற்கும். நெதர்லாந்தின் இரண்டாம்-நிலை கால்பந்துக் கூட்டிணைவான ஈர்ஸ்டே டிவிசி-யுடன் அணிகளை தகுதிகுறைப்பு-தகுதியேற்றம் முறைமையில் இது செயல்படுகிறது. பருவத்தின் முடிவில் அதிக புள்ளிகள் பெற்றிருக்கும் அணி டச்சு தேசிய வாகைத்தொடர் பட்டத்தை வெல்லும். ஆம்ஸ்டர்டம் நகரை அமைவிடமாகக் கொண்ட அயாக்சு அணியே இதுவரை அதிகமுறை வாகையர் பட்டம் வென்றிருக்கிறது; 24 எரெடிவிசி பட்டங்கள் (மொத்தமாக 32 தேசிய வாகையர் பட்டங்கள்). பிஎஸ்வி எய்ந்தோவன் 18 (21) பட்டங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் ஃபெயினூர்டு 9 (14) பட்டங்களுடன் இருக்கிறது.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.