என்றியேட்டா கில் சுவோப்

என்றியேட்ட கில் சுவோப் (Henrietta Hill Swope) (அக்தோபர் 26, 1902 – நவம்பர் 24, 1980)[2] ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் மாறும் விண்களைப் பற்றி ஆய்வு செய்தார். குறிப்பாக, செபீடு விண்மீன்களுக்கான அலைவுநேரம்-ஒளிர்மை உறவை அளந்தார். இவை தம் இயல்பு ஒளிர்மைக்கு நேர்விகிதத்தில் மாறும் அலைவுநேரம் கொண்ட மிகவும் பொலிவான மாறும் விண்மீன்கள் ஆகும். இவற்றின் அலைவுநேர அளவீடுகள் அவற்ரின் தொலைவுகளோடு உறவுள்ளவை. எனவே இத்தொலைவுகளை வைத்து பால்வழியின் உருவளவையும் அதிலிருந்தான மற்ற பால்வெளிகளின் தொலைவுகளையும் கண்டறியலாம்.

என்றியேட்டா கில் சுவோப்
Henrietta Hill Swope
பிறப்புஅக்டோபர் 26, 1902(1902-10-26)
புனித உலூயிசு, மிசவுரி
இறப்புநவம்பர் 24, 1980(1980-11-24) (அகவை 78)
இலாசு ஏஞ்சலீசு, கலிபோர்னியா[1]
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்கார்னிகி அறிவியல் நிறுவனம்
அறியப்படுவதுபால்வெளிகளின் தொலைவுகள்
விருதுகள்வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது]] (1968)

தகைமைகளும் விருதுகளும்

  • வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது, 1968
  • சிறுகோள் 2168 சுவோப் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.
  • பெர்னார்டு தகைமை முன்னாள் மாணவர் விருது, 1975
  • The Swope Telescope இவரது நினைவாக சிலியில் உள்ள இலாசு கம்பனாசு வாண்காணகத்தின் சுவோப் தொலைநோக்கி பெயரிடப்பட்டது.
  • சுவிட்சர்லாந்து பேசல் பல்கலைக்கழகம் 1975 இல் இவருக்குத் தகைமை முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.
  • பெர்னார்டு கல்லூரி தகைமைப் பதக்கம், 1980

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.