என். வி. என். சோமு

என். வி. என். சோமு (N. V. N. Somu) (இறப்பு 14 நவம்பர் 1997) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.   திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக வட சென்னை தொகுதியில் இருந்து, 1984 மற்றும் 1996 தேர்தலில் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] தி. மு. க தலைவர் என். வி. நடராஜன் மகனான என். வி. என். சோமுவிற்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த போது ஒரு உலங்கூர்தி விபத்தில், 14 நவம்பர் 1997 அன்று இறந்தார்.[3] அவரது மகள், என். எஸ். கனிமொழி, தி. மு. க சார்பாக வேட்பாளராக போட்டியிட்டார்.[4]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.