என். எம். நம்பூதிரி

டாக்டர் என்.எம். நம்பூதிரி (17 ஏப்ரல், 1943 - 30 மார்ச் 2017) ஒரு பேராசிரியரும், எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமாவார். தமிழக மற்றும் கேரள வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி சிறீ புன்னச்சேரி நீலகண்ட சர்மா நினைவு அரசு ஸமஸ்கிருத கல்லூரியில், மலையாளம் முதுகலைப் படிப்பு பிரிவின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார்.

என்.எம். நம்பூதிரி
பிறப்பு {{{birthname}}}
ஏப்ரல் 17, 1943 (1943-04-17)
ஆலப்புழா, கேரளா
http://www.malabarandkeralastudies.net

வாழ்க்கைக் குறிப்பு

என்.எம். நம்பூதிரி கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புலியூர் நீலமனா இல்லத்தில் 1943 ஏப்ரல் 17-ஆம் தேதி பிறந்தார். பி.எஸ்.ஸி. இயற்பியல், மலையாளம் எம்.ஏ. ஆகிய பட்டப்படிப்புகளுக்கு பிறகு, டாக்டர் கெ.ஏ. எழுத்தச்சன் மற்றும் டாக்டர் சி.பி. அச்சுதனுண்ணி ஆகியோரின் வழிகாட்டுதலில் இடப்பெயர் அடிப்படையில் கோழிக்கோடு (Toponomy) என்ற விஷயத்தில் பி.எச்.டி. எடுத்தார்.

செங்ஙன்னூர் கிறிஸ்தவ கல்லூரி, தலச்சேரி அரசு பிரண்ணன் கல்லூரி, கோழிக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோழிக்கோடு மாலைக் கல்லூரி, பட்டாம்பி அரசு ஸமஸ்கிருத கல்லூரி ஆகிய கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

கேரளாவில் முதன்முதலாக இடப்பெயர்களின் மூலம் (Toponomy) கோழிக்கோடு நகரத்தின் வரலாற்றை ஆய்வு செய்தார். கோழிக்கோடு சாமூதிரி மன்னர் பரம்பரையின் ஓலைச்சுவடிகளை கண்டெடுத்து ஆய்வு செய்தார். நிளா ஆற்றுப்படுகை (பாரதப்புழா) ஆய்வு என கேரளாவின் வரலாற்று, சமூக, பரிணாமங்கள் குறித்து வெகு விமரிசையாக ஆய்வுகளை மேற்கொண்டார்.

1993-ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஹெர்மன் குண்டர்ட் மாநாட்டில் பங்கேற்றார்.

இவர் 2017 மார்ச் 30-ம் தேதி ஆலப்புழாவில் காலமானார்.

படைப்புகள்

  • கேரள வரலாறு குறித்த ஆங்கில குறும்புத்தகம்

http://www.malabarandkeralastudies.net/downloadfiles/pdf/culturaltraditionsinmedeivalkerala.pdf

மேற்கோள்கள்

  • முசிரிஸ் என்னும் வரலாற்றுத் துறைமுகத்தின் அமைவிடம் குறித்த விவாதம்

http://www.thehindu.com/todays-paper/tp-national/article2561478.ece

  • வரலாற்றுச் சிறப்பு மிக்க கருத்தரங்கம்

http://en.wikipedia.org/wiki/Synod_of_Diamper

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.