எத்தில்மக்னீசியம் புரோமைடு
எத்தில்மக்னீசியம் புரோமைடு (Ethylmagnesium bromide) என்பது C2H5MgBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமமக்னீசியம் சேர்மமாகும். கிரின்யார்டு கரணியான இச்சேர்மத்தில் ஒரு மக்னீசியம் நேர்மின் அயனி எத்தில் தொகுதியுடன் சகப்பிணைப்பும் புரோமின் எதிர்மின் அயனியுடன் அயனிப்பிணைப்பும் கொண்டுள்ளது. C2H5Mg+•Br− என்றும் எழுதப்படும் இச்சேர்மம் பரவலாக ஆய்வகங்களில் கரிமச் சேர்மங்களை தொகுப்பு முறையில் தயாரிக்கப் பயன்படுகிறது.
![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
925-90-6 ![]() | |
ChemSpider | 10254342 ![]() |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 101914 |
SMILES
| |
பண்புகள் | |
C2H5BrMg | |
வாய்ப்பாட்டு எடை | 133.27 g·mol−1 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Oxford MSDS |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
வினைகள்
மின்னணு கூட்டு வினையில் எத்தில் எதிரயனி முறியலகிற்கு செயற்கை சமனாக செயல்படுவதை தவிர்த்து எத்தில்மக்னீசியம் புரோமைடு வலிமையான ஒரு காரமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆல்கைன்கள் போன்ற பல்வேறு அடி மூலக்கூறுகளை புரோட்டான் நீக்கம் செய்யும் வினை இதற்கு எடுத்துக்காட்டாகும் :[1][2][3]
- RC≡CH + EtMgBr → RC≡CMgBr + EtH.
இப்பயன்பாட்டிற்கு கரிம இலித்தியம் வினைப்பொருட்கள் பரவலாகக் கிடைப்பதால் எத்தில்மக்னீசியம் புரோமைடு முழுமையாக ஒதுக்கப்படுகிறது.
தயாரிப்பு
வணிகமுறையில் எத்தில்மக்னீசியம் புரோமைடு பரவலாகக் கிடைக்கிறது. வழக்கமாக டை எத்தில் ஈதர் அல்லது டெட்ரா ஐதரோபியூரான் சேர்மத்தில் ஒரு கரைசலாக இது காணப்படுகிறது. கிரின்யார்டு கரணியிலிருந்து சாதாரணமாக எத்தில்மக்னீசியம் புரோமைடைத் தயாரிக்க இயலும். டை எத்தில் ஈதரில் உள்ள மக்னீசியத்தை புரோமோயீத்தேனுடன் வினைபுரியச் செய்து இதைத் தயாரிக்கிறார்கள். :[4]
- EtBr + Mg → EtMgBr
மேற்கோள்கள்
- Taniguchi, H.; Mathai, I. M.; Miller, S. I. (1970), "1-Phenyl-1,4-Pentadiyne and 1-Phenyl-1,3-Pentadiyne", Org. Synth. 50: 97, http://www.orgsyn.org/orgsyn/orgsyn/prepContent.asp?prep=cv6p0925; Coll. Vol. 6: 925
- Quillinan, A. J.; Scheinmann, F. (1978), "3-Alkyl-1-alkynes Synthesis: 3-Ethyle-1-hexyne", Org. Synth. 58: 1, http://www.orgsyn.org/orgsyn/orgsyn/prepContent.asp?prep=cv6p0595; Coll. Vol. 6: 595
- Newman, M. S.; Stalick, W. M. (1977), "1-Ethoxy-1-butyne", Org. Synth. 57: 65, http://www.orgsyn.org/orgsyn/orgsyn/prepContent.asp?prep=cv6p0564; Coll. Vol. 6: 564
- Moyer, W. W.; Marvel, C. S. (1931), "Triethyl Carbinol", Org. Synth. 11: 98, http://www.orgsyn.org/orgsyn/orgsyn/prepContent.asp?prep=cv2p0602; Coll. Vol. 2: 602