எதுவார்து செவர்துநாத்சே
எதுவார்து செவர்துநாத்சே (Eduard Shevardnadze, சியார்சிய: ედუარდ შევარდნაძე, உருசியம்: Эдуа́рд Амвро́сиевич Шевардна́дзе, 25 சனவரி 1928 - 7 சூலை 2014)[1] ஜோர்ஜியாவின் முன்னாள் அரசுத்தலைவரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 1972 முதல் 1985 வரை ஜோர்ஜியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முதல் செயலாளராகவும், ஜோர்ஜிய சோவியத் குடியரசின் தலைவராகவும், 1985 முதல் 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் வரை சோவியத் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். மிக்கைல் கொர்பச்சோவின் காலத்தில் சோவியத் வெளியுறவுக் கொள்கையில் செவர்நாத்சே பல முக்கிய தீர்மானங்களை எடுத்தார். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் 1992 முதல் 2003 வரை ஜோர்ஜியாவின் அரசுத்தலைவராக இருந்தார். 2003 இல் மேற்கொள்ளப்பட்ட ரோஜாப் புரட்சியை அடுத்து இவர் தனது பதவியில் இருந்து கட்டாய ஓய்வு பெற்றார்.
எதுவார்த் செவர்த்நாத்சே Eduard Shevardnadze ედუარდ შევარდნაძე | |
---|---|
![]() | |
ஜோர்ஜியாவின் 2வது சனாதிபதி | |
பதவியில் 26 நவம்பர் 1995 – 23 நவம்பர் 2003 | |
முன்னவர் | பதவி மீளமைப்பு; அரசுத்தலைவராக இவரே |
பின்வந்தவர் | நீனோ புர்ஜநாத்சே |
நாடாளுமன்றத் தலைவர் - அரசுத்தலைவர் | |
பதவியில் 6 நவம்பர் 1992 – 26 நவம்பர் 1995 (நாடாளுமன்றத் தலைவராக 1992 நவம்பர் 4 முதல்) | |
முன்னவர் | புதிய பதவி; ஜோர்ஜியாவின் அரசுப் பேரவைத் தலைவராக இவரே |
பின்வந்தவர் | பதவி ஒழிப்பு; சுராப் சிவானியா நாடாளுமன்றத் தலைவராக |
ஜோர்ஜியாவின் அரசுப் பேரவைத் தலைவர் | |
பதவியில் 10 மார்ச் 1992 – 4 நவம்பர் 1992 | |
முன்னவர் | புதிய பதவி; இராணுவப் பேரவை (இடைக்கால அரசுத்தலைமை) |
பின்வந்தவர் | பதவி ஒழிப்பு; நாடாளுமன்றத் தலைவராக இவரே |
சோவியத் வெளியுறவுத்துறை அமைச்சர் | |
பதவியில் 19 நவம்பர் 1991 – 26 டிசம்பர் 1991 | |
Premier | இவான் சிலாயெவ் |
முன்னவர் | பொரிஸ் பான்கின் |
பின்வந்தவர் | பதவி ஒழிப்பு |
சோவியத் வெளியுறவுத்துறை அமைச்சர் | |
பதவியில் 2 சூலை 1985 – 20 டிசம்பர் 1990 | |
Premier | நிக்கொலாய் தீகனொவ் நிக்கொலாய் ரீஷ்கொவ் |
முன்னவர் | அந்திரேய் குரோமிக்கோ |
பின்வந்தவர் | அலெக்சாந்தர் பெஸ்மெர்த்னிக் |
ஜோர்ஜிய கம்யூனிஸ்டுக் கட்சியின் முதல் செயலர் | |
பதவியில் 29 செப்டம்பர் 1972 – 6 சூலை 1985 | |
முன்னவர் | வசில் உம்சவநாத்சே |
பின்வந்தவர் | ஜும்பார் பத்தியாஷ்விலி |
ஜோர்ஜிய சோவியத் குடியரசின் உட்துறை அமைச்சர் | |
பதவியில் 1967–1972 | |
முன்னவர் | விளாதிமிர் ஜன்ஜ்காவா |
பின்வந்தவர் | திலார் அபுலியானி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சனவரி 25, 1928 மமாத்தி, குரியா, திரான்சுகாக்கசிய சோவியத் குடியரசு, சோவியத் ஒன்றியம் |
இறப்பு | 7 சூலை 2014 86) திபிலீசி, ஜோர்ஜியா | (அகவை
தேசியம் | சோவியத், ஜோர்ஜியர் |
அரசியல் கட்சி | சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி (1948-1991) சுயேட்சை (1991-1995) ஜோர்ஜிய மக்களின் ஒன்றியம் (1995-2003) |
வாழ்க்கை துணைவர்(கள்) | நனூலி செவர்துநாத்சே |
பிள்ளைகள் | 2 |
சமயம் | ஜோர்ஜிய மரபுவழி திருச்சபை |
படைத்துறைப் பணி | |
பணி ஆண்டுகள் | 1964–1972 |
தர வரிசை | ![]() மேஜர் ஜெனரல் |
மேற்கோள்கள்
- Georgia ex-leader Shevardnadze dies - BBC News
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.