ஊட்டி தாவரவியல் பூங்கா
ஊட்டி தாவரவியல் பூங்கா (Ooty Botanical Gardens) தமிழ்நாடு மாநிலத்தில் நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம் என்னும் ஊட்டியில் அமைந்துள்ளது.[3] இப்பூங்கா 1847 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது 22 எக்டேர் பரப்பில் பல பிரிவுகளாக அமைந்துள்ளது.[4] இதன் அருகில் தொட்டபெட்டா சிகரம் 2,623 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. ஆனால் ஊட்டி தாவரவியல் பூங்காவின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 2,250 முதல் 2,500 மீட்டர்கள் வரை இருக்கும்.[2] இப்பூங்கா தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் பராமரிக்கப்படுகிறது.[5] இங்கு வருடத்திற்கு 140 செ,மீ மழை பெய்யும். இங்கு கூடிய வெப்பநிலை 28 °C ஆகவும் குறைந்த வெப்பநிலை 0 °C ஆகவும் காணப்படுகின்றது.[6]
அரசு தாவரவியல் பூங்கா Government Botanical Garden | |
---|---|
அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி | |
வகை | தாவரவியல் பூங்கா |
அமைவிடம் | உதகமண்டலம் |
ஆள்கூறு | 11.418752°N 76.711038°E |
பரப்பு | 55 ஏக்கர்கள் |
திறக்கப்பட்டது | 1847[1] |
Owned by | தமிழ்நாடு அரசு |
Operated by | தமிழ்நாடு அரசு தோட்டக்கலை வளர்ச்சி முகமை |
நிலை | திறந்த நிலை |
Species | 650[1] |
Collections | தக்கை மரம், Paper bark tree, Monkey puzzle tree[2] |
வரலாறு
1848 ஆம் ஆண்டு அரசு தோட்டக்கலை உதகமண்டலத்தில் கட்டிடக்கலை வல்லுநர் கிரஹாம் மக்கில்வோர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.[7] இதற்கு முன்னரே 1840 ம் ஆண்டிலேயே இதற்கான விதையை திவிதேல் என்பவர் தூவினார். ஐரோப்பிய மக்களுக்காக 3 ரூபாய் சந்தாவில் மாதம் முழுவதும் காய்கறி கொடுக்க அப்போதையா ஐரோப்பியர்கள் முடிவு செய்தனர். அப்போது கணிசமான அளவு காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. அப்போது ஐரோப்பிய 2 ஆவது படையை சேர்ந்த மொலினெக்சு என்பவரே இப்பகுதியை நிர்வகித்துவந்தார். கொஞ்ச நாட்கள் காய்கறிகள் இலவசமாக அவர்களுக்கு வழங்கப்பட்டுவந்தது, ஆனால் இத்திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதற்காக 1847ல் பலரிடமும் நிதி திரட்டப்பட்டது. இந்தியாவில் அப்போதைய காலகட்டத்தில் தோட்டக்கலை துறை என்பது அரிதாகவே இருந்தது, மற்றும் இத்தோட்டத்திற்கான விதைகள், கன்றுகள் பக்கத்து காட்டில் மட்டுமே கிடைத்தது. அதனால் விதைகளை பொது இடத்தில் விற்பனை செய்ய ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. அவ்விடத்தின் பெயர் Lushingto என்பதாகும்(தற்போது எபிரோன் பள்ளி Hebron School). இது ராஜ் பவன் அருகில் அமைந்துள்ளது. அப்போதய அரசிடம் அங்கு வேலை செய்பவர்களின் சம்பளத்திற்காக உதவி கோரப்பட்டது. 1848 இல் திரு. டபிள்யூ. ஜீ. மக்கில்வோர் இத்தோட்டத்தைச் செம்மைப்படுத்தினார், இதற்கு 10 ஆண்டுகள் பிடித்தன. அவர் இலண்டனில் அமைந்துள்ள கிழக்கு இந்தியா கம்பனிக்கு 1848 இன் இறுதியில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தார்.[8]
திரட்டுகள்
இப்பூங்காவில் சீனவகையான பொன்சாய் மரங்கள், மூலிகைச்செடிகள், அழகான புதர்கள், பன்னம்(Ferns)என்று அழைக்கப்படும் ஒரு வகையான வெளிநாட்டு செடிகள் போன்ற ஆயிரக்கணக்கான செடிகொடிகளும், மரங்களும் உள்ளன.[9] இதன் மையப்பகுதியில் 20 மில்லியன் ஆண்டிகள் பழமையான மரம் ஒன்றும் உள்ளது. அடுக்கடுக்காக பூக்கும் தாவரங்கள், அல்லிகள் நிறைந்த குளம், இத்தாலியப்பாணியில் அமைந்த பன்னம் படுக்கைகள ஆகியன இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
பிரிவுகள்
ஊட்டி தாவரவியல் பூங்கா ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கீழ்தள தோட்டம், மேல்தள அழகான நீருற்றுப்பகுதி, புதிய தோட்டம், இத்தாலியன் தோட்டம், அருமையான செடிகோடிகளை வளர்க்கும் கண்ணாடி வீடு, மற்றும் செடி வளர்ப்பகம் என பிரிக்கப்பட்டுள்ளது.[2][5]
கீழ் தோட்டம்
கீழ் தோட்டத்தில் "kikiyu" என்ற புல்வெளி பச்சைப்பசேல் என்று காட்சி கொடுக்கிறது.[6] பன்னம் வகைகள் மட்டும் 127 வகையான செடிகள் இங்கு இடது பக்கத்தில் ராஜ்பவன் செல்லும் வழியில் அமைந்துள்ள இது பல ஆண்டு வரலாற்றைக்கொண்டுள்ளது. இந்திய நாட்டின் வரைபடத்தைக்குறிக்கும் வகையில் பல தாவரங்களைக்கொண்டு அமைக்கப்பட்ட காட்சி பிரசித்திபெற்றது. மற்றும் Hymnosporum flavum, Cordylline australlis, Cedrus deodara, Cupressus funebrils, Araucaria bidwillii, Cupressus macrocarpa, Cryptomeria japonica, maculate யூக்கலிப்டஸ், citriodora தைலம் (மரம்), Salix babylonica, Salix ஹெடேரோஃபைலா, போடோகார்பஸ் taxifolia, Dracena lanuginosa, Pinus patula, ரோடோடென்ரான் போன்ற தாவர இனங்களும், boreum, Quercus மாண்டனா, Quercus cerris, Quercus செரட்டா, Quercus grilffithi, Quercus illex, மாக்னோலியா க்ரேண்டிப்லோரா போன்ற புல்வெளி இனங்களும் காணப்படுகிறது.
புதிய தோட்டம்
இத்தோட்டம் சமீபகாலத்தில் தான் உறுவாக்கப்பட்டது. இத்தோட்டத்தில் பிறை வடிவ குளம் ஒன்று உள்ளது. ஹைப்ரிட் டீ ரோஸ் என்ற ரோஜா செடிகள் 300 வகையானவையும், உயர்ந்த ப்லோரிபண்டா மற்றும் போலியன்தாஸ் போன்ற செடிகளும் அமைந்துள்ளது. இப்பகுதியில் சரிவான அமைப்பில் பூ செடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு சின்னங்கள் கம்பளம் விரித்தார்போல் உள்ள இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் நீர்வாழ் தாவரங்களின் வகைகளும் உள்ளது. அத்தகைய Taxodium mucronatum, பைரிஸ் ovalifolia, Juniperus வெர்ஜினியானா, யூக்கலிப்டஸ் eugenoides, Pinus wallichiana, Photinia lindleyana, Pinus canaariensils, ஜிங்கோ பிலோபா, Araucaria cunninghammi மற்றும் Cupressus lawsoniana போன்ற முக்கியமான மரஇனங்கள் அனைத்து பகுதிகளிலும் நடப்படுகிறது.
இத்தாலியன் பூங்கா
இப்பகுதி முதல் உலக போரில் பிடிபட்ட இத்தாலிய கைதிகளால் உருவாக்கப்பட்டது. இவர்கள் உதகமண்டலத்தில் ராணுவக்கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் ஆவர். உடுவுரு மலர், (Asters) ஆப்பக்கொடி, ageratum பிசின், begonia, petunia, பான்சி, phlox, சூரிய காந்தி இன செடி மற்றும் சால்வியா, delphinium என்ற ஒரு வகை தோட்ட செடி, டாக்லியா போன்ற பூக்களும் இந்த தோட்டத்தில் காணப்படுகிறது.[10] நீர்வாழ் தாவரங்களை உள் அடக்கிய பிறைவடிவ லில்லி குளம் ஒன்று இங்கு உள்ளது. தோட்டத்தில் இந்த பகுதியில் வளர்ந்து மர இனங்கள் Prunus cerasoides, Saurauja nepaulensis, Grevillea hilliana, Aesculus punduana, Pinus sabineana, Cupressus torulosa, Syncarpia glomulifera, Pinus roxburghii, மற்றும் Albizzia julibrissin ஆகியன.[10]
கண்ணாடி வீடு
இங்கு 1912ம் ஆண்டில் செடிகொடிகளை வளர்க்கும் அருமையான கண்ணாடிவீடு கட்டப்பட்டது. இங்கு Cineraria, Schizanthus, Calceolaria, பால்ஸம் என்ற ஒருவகை செடி, Gloxinia, begonia, Coleus, தோட்ட செடி வகை, கிரிஸான்தமம், Primulas, Tydea, Achemenes போன்ற வருடமுழுதும் பூத்துக்குலுங்கும் செடியும் மற்றும் perennials போன்றவையும் கிழக்கு நோக்கிய முகத்துடன் காட்சி அளிக்கிறது.[10]
பயணம்
1908 முதல் நீலகிரி மலை புகைவண்டி உதகை வரை பயணம் செய்ய வசதியாக அமைந்துள்ளது. இந்த புகைவண்டிக்கு 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.[11]
படத் தொகுப்பு
மேற்கோள்கள்
- "Peaks of pleasure". Dnaindia.com. பார்த்த நாள் 2011-01-22.
- "GOVERNMENT BOTANICAL GARDEN". Nilgiris.tn.gov.in. பார்த்த நாள் 2011-01-22.
- "Ooty Botanical Garden". Ooty.com. பார்த்த நாள் 2011-01-22.
- "Archive for the ‘States of South India’ Category-Botanical Garden". India-tourist-places.com. பார்த்த நாள் 2011-01-22.
- "Tamil Nadu - Government Botanical Garden". Scstsenvis.nic.in. பார்த்த நாள் 2011-01-22.
- "ooty botanical garden". Tourismindiatoday.com. பார்த்த நாள் 2011-01-27.
- D, Radhakrishnan (9 Jun 2009), "A tribute to creator of Ooty Botanical Garden", தி இந்து, India
- , Report on the Ootacamund Gardens for 1848.
- "Ooty to host spices show for first time", தி இந்து, India, 11 Mar 2010
- "Places of Interest". Nilgirislive.com. பார்த்த நாள் 2011-01-27.
- கொள்ளை கொள்ளும் நீலகிரி பயணம்