உவர்ப்புத் தன்மை

உவர்ப்புத்தன்மை அல்லது உவர்ப்பியம் என்பது நீரின் உப்புத்தன்மையை குறிப்பதாகும். ஆதாவது நீரில் கரைந்துள்ள உப்பின் அளவை எடுத்துரைப்பதாகும். உவர்ப்புத்தன்மை என்று முன்னொட்டு ஏதும் இல்லாமல் கூறினால் அது பெரும்பாலும் நீரின் உப்புத்தன்மையையே குறிக்கும், மண்ணின் உவர்ப்புத்தன்மை மண் உவர்ப்புத்தன்மை என்று அழைக்கப்படுகிறது.

நீரை உவர்ப்புத்தன்மை கொண்டு வேறுபடுத்துதல்

நீரை உவர்ப்புத்தன்மை கொண்டு வேறுபடுத்துதல் என்பது, நீரில் கரைந்துள்ள உப்பின் அளவைக் கொண்டு நான்கு வகையாக வேறுபடுத்தப்படுத்துவதாகும். இந்நீரில் உப்பின் அளவை நீரின் மின் கடத்துதிறனைக் கொண்டு அளவிடப்படுகிறது. நீரில் உள்ள உப்பின் அளவு ஆயிரத்தில் எவ்வளவு பங்கு என்பதைக் குறிக்கும் பி.பி.டி (ppt, parts per thousand) என்ற அளவீட்டின் மூலம் குறிக்கப்படுகிறது.

கடல் நீரில் உவர்ப்புத்தன்மை

உலகில் உள்ள பேராழிகளின் சராசரி உவர்ப்பியம் ஒரு லிட்டர் நீரில் 35 கிராம் ஆகும். சாக்கடல், செங்கடல், பாரசீக வளைகுடா போன்றவற்றில் உப்பளவு மிக அதிகமாகும். இங்கு உவர்ப்பியத்தின் அளவு 40 கிராம் ஆகும். (காரணம் மிக அதிகமாக நீராவியாதாலும் மற்றும் குறைந்த அளவு நன்னீர் சேர்க்கையும் ஆகும்). கடல்களிலேயே சாக்கடலில் மிக அதிக அளவு உவர்ப்பியம் உள்ளது. துருவ பிரதேசங்களில் உள்ள கடல்களில் உவர்ப்பியம் மிக குறைவாக இருப்பதற்குப் பனி உருகுதலும் அதிக மழை பொழிவும் காரணமாகும்.[1]

நீர் உவர்த்தன்மை
நன்னீர் உவர் நீர் உவாப்பு நீர் கடனீர்
< 0.05 % 0.05 – 3 % 3 – 5 % > 5 %
< 0.5 ppt 0.5 – 30 ppt 30 – 50 ppt > 50 ppt

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை, பதிப்பு 2017, ஏழாம் வகுப்பு, பருவம் 3, தொகுதி 2, பக்கம் 197
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.