உலகநீதி
உலகநீதி ஒரு தமிழ் நீதி நூல்.
இதனை இயற்றியவர் உலகநாதர்.
18ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூலில் 13 விருத்தப்பாக்கள் உள்ளன.
ஒவ்வொரு பாடலும் முருகனை வாழ்த்தி முடிவதாக அமைந்துள்ளது.
இந்நூல் கூறும் அறிவுரைகள் எதனைச் செய்ய வேண்டாம் என்று எதிர்மறையாக அமைந்துள்ளன. (எ.கா. ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்)
16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உலகநாத பண்டிதர் இந்த நூலை இயற்றினார் என்பர்.[1]
- 16-ஆம் நூற்றாண்டு உலகநாத பண்டிதர் சைவ சித்தாந்த நூல்கள் வெளிவரத் தூண்டியவர். சிவனை வழிபட்டவர். வடமொழியில் ஈடுபாடுடையவர்.
- 18-ஆம் நூற்றாண்டு உலகநீதி இயற்றிய உலகநாதர் முருக வழிபாடுடையவர், எல்லாருக்கும் பொதுவான அறநெறியைப் பாடியவர்.
- "அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்" என்பன போன்றவற்றிலுள்ள 'உலகநீதி' தமிழ்நடை பிற்காலத்தது.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
வெளி இணைப்புகள்
மேற்கோள் குறிப்பு
- உ. வே. சாமிநாதையர். இவரது இந்தக் கூற்றுக்கு சான்று இல்லை என்பது மு. அருணாசலம் கருத்து.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.