உலக தூக்க நாள்

உலக தூக்க நாள் (World Sleep Day) ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு தூக்க மருத்துவத்துக்கான உலக அமைப்பினால் 2008 ஆம் ஆண்டு முதல் நினைவுகூரப்படுகிறது.[1] ஆரோக்கியமான, சிறந்த தூக்கத்தின் பயன்களைக் கொண்டாடுவதும், தூக்கப் பிரச்சினைகள், மற்றும் அதற்கான மருத்துவம், கல்வி, சமூக நோக்கு ஆகியவற்றை சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதும், தூக்கக் கோளாறுகளின் தடுப்பு மற்றும் அவற்றின் மேலாண்மையை ஊக்குவிப்பதும் இந்நிகழ்வின் நோக்கமாகும்.

ஆண்டு நிகழ்வுகள்

உலக தூக்க நாள் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று இடம்பெறுகிறது. (மார்ச் சம இரவு நாள்).[2] முதலாவது தூக்க நாள் 2008 மார்ச் 14 அன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுகளில், தூக்கம் தொடர்புடைய விவாதங்கள், மற்றும் கல்விக் கண்காட்சிகள் ஆகியன இடம்பெறுகின்றன.

ஆண்டுநாள்குறிக்கோள் வாசகம்
200814 மார்ச்'நன்றாக தூங்க, விழித்து வாழ்'[3]
200920 மார்ச்'எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டி, பாதுகாப்பாக வந்து சேர்'[4]
201019 மார்ச்'நன்றாக தூங்கு, ஆரோக்கியமாகத் தங்கு'[5]
201118 மார்ச்'நன்றாகத் தூங்கு, ஆரோக்கியமாக வளர்'[3][6]
201216 மார்ச்'எளிதான சுவாசம், நன்றாகத் தூங்கு'[7]
201315 மார்ச்'நல்ல தூக்கம், ஆரோக்கியமான முதுமை'[7]
201414 மார்ச்'அமைதியான தூக்கம், எளிதாக சுவாசம், ஆரோக்கியமான உடல்'[7]
201513 மார்ச்'When sleep is sound, health and happiness abound'
201618 மார்ச்'நல்ல தூக்கம் ஓர் அடையக்கூடிய கனவு'[7]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.