உயிரியல் போர்
உயிரியல் போர்முறை, உயிரிப்போர் அல்லது கிருமி போர்முறை (Biological warfare) என்ற போர்முறையானது உயிரியல் கொல்லிகள் அல்லது தொற்றும் காரணிகளான பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சைகளைப் பயன்படுத்தி மனிதர்களையோ,விலங்குகளையோ அல்லது தாவரங்களையோ கொல்லும் நோக்கதோடு அல்லது செயல்படாதவாறு செய்யும்படி தாக்குவது ஆகும். உயிரியல் ஆயுதங்கள் என்பது ஓம்புயிருக்குள் சென்றவுடன் அதிவிரைவாக இனப்பெருக்கம் செய்து வளர்ச்சியடையும் ஒரு உயிரினம் அல்லது தானே பெருக்கிக் கொள்ளும் திறம் படைத்த உருப்படி (வைரஸுகள் உயிருள்ளவையாக கருதப்படுவதில்லை) ஆகும்[1]. பூச்சியியல் போர்முறையும் உயிரிப்போரில் ஒருவகையாக கருதப்படுகிறது.நால்வகைப் பேரழிவு ஆயுதங்களுள் இதுவும் ஒன்று.கதிரியக்கப் போர், அணுஆயுத போர் மற்றும் வேதியியல் போர் ஏனையவையாகும்.
பேரழிவு ஆயுதங்கள் |
---|
![]() |
வகை |
• கதிரியக்கவியல் |
நாடு |
• அல்பானியா • அல்ஜீரியா • ஆர்செந்தீனா • அவுத்திரேலியா • பிரேசில் • பல்கோரியா • பர்மா • கனடா • சீனா • பிரான்சு • செருமனி • இந்தியா • ஈரான் • ஈராக் • இசுரேல் • சப்பான் • லிபியா • மெக்சிக்கோ • நெதர்லாந்து • வட கொரியா • பாக்கித்தான் • போலாந்து • ரேமேனியா • உரசியா • சவுதி அரேபியா • தென்னாபிரிக்கா • தென் கொரியா • சுவிடன் • சிரியா • தாய்வான் • உக்கிரேன் • ஐக்கிய இராச்சியம் • அமெரிக்கா |
வளர்ச்சி |
• வேதியியல் • அணு • ஏவுகணைகள் |
ஒப்பந்தங்கள் |
• ஒப்பந்தங்களின் பட்டியல் |
• ![]() |
உயிரி ஆயுதங்கள் ஒரு தனி நபரையோ, ஒரு கூட்டத்தாரையோ அல்லது ஒரு முழு இனத்தையோ அழிக்கும் படி பிரத்யேகமாக உருவாக்கபடலாம். இவை ஒரு நாட்டினாலோ அல்லது நாடு சாராத தனிக் கூட்டத்தாரலோ உருவாக்கப்படவும், வாங்கவும், சேர்ப்பில் வைத்து பின்னர் உபயோகப்படுத்தப்படவும் முடியும். நாடு சாராத தனிக் கூட்டத்தாரால் உபயோகப்படுத்தப்படின், அது உயிரித்தீவிரவாதம் என்றழைக்கப்படும்.
உயிரிப்போர்முறையும் வேதிப்போர்முறையும் ஒன்றையொன்று தழுவியவாறே உள்ளது. உயிரியாயுதங்களால் வெளிப்படுத்தப்படும் நச்சு, உயிரியல் ஆயுதங்கள் பட்டியலிலும் அதே சமயம் வேதியியல் ஆயுதங்கள் பட்டியலிலும் இடம்பெறும்.
உயிரியல் ஆயுதங்கள் பயன்படுத்துவது உலகளவில் தடை செய்யப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்துவது போர்க் குற்றமாக கருதப்படும்.