உமியோ பல்கலைக்கழகம்

உமியோ பல்கலைக்கழகம் (Umeå University; சுவீடிய: Umeå universitet) சுவீடன் நாட்டின் வட-மையப் பகுதியிலுள்ள உமியோ என்னும் நகரத்தில் உள்ளது. 1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உமியோ பல்கலைக்கழகம், சுவீடன் நாட்டின் ஐந்தாவது பழமையானப் பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம், 2013 ஆம் ஆண்டுக் கணக்கின்படி 32,000 பதிவு செய்யப்பட்ட மாணவர்களையும், நாலாயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டுள்ளது[3]. இவர்களில் 368 பேராசிரியர்கள் உட்பட, இதில் பாதிக்கும் மேலானோர் ஆய்வாளர்கள்/ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உமியோ பல்கலைக்கழகம்
Umeå Universitet

நிறுவல்:17 செப்டம்பர் 1965[1]
வகை:பொதுத்துறை பல்கலைக்கழகம்
துணைவேந்தர்:முனைவர். லேனா குஸ்தாஃப்சன் (Lena Gustafsson)
பீடங்கள்:4,200[2]
மாணவர்கள்:34,200[2]
அமைவிடம்:உமியோ, சுவீடன்
வளாகம்:நகர்ப்புறம்
சார்பு:EUA, UArctic
இணையத்தளம்:www.umu.se/english
உமியோ பல்கலைக்கழக வரைபடம்
உமியோ பல்கலைக்கழக வளாகம்

உமியோ பல்கலைக்கழகம், சில மர வகைகளின் மரபகராதி[4][5], தொழிலக வடிவமைப்பைப் பற்றிய ஆய்வுகளுக்கு உலகளவில் புகழ் பெற்றது[6].

மேற்கோள்கள்

  1. "Facts and Figures". Umeå University (2013-04-11). பார்த்த நாள் 2014-05-18.
  2. "Facts and Figures/ Did You Know That ... ?". Umeå University (2013-04-15). பார்த்த நாள் 2014-05-18.
  3. Umeå University in Figures Retrieved July 1, 2014
  4. PNAS, April 6, 2004: "A Populus EST resource for plant functional genomics" retrieved July 2, 2014
  5. Nature 497, 579–584: "The Norway spruce genome sequence and conifer genome evolution" Retrieved July 2, 2014
  6. Red Dot Design Ranking 2013, Universities - Americas & Europe Retrieved July 2, 2014
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.