இழுவை

பாய்ம இயக்கவியலில், இழுவை (drag) (சில நேரங்களில் காற்றுத்தடை அல்லது நீர்ம எதிர்ப்பு) விசையானது பாய்மத்தினூடாக (திரவம் அல்லது காற்று) ஒரு பொருளின் இயக்கத்தை எதிர்க்கும் விசையாகும். இவ்விசை பாய்மத் திசைவேகத்திற்கு எதிர்த் திசையில் இருக்கும். மற்ற எதிர்ப்பு விசைகளைப் போலன்றி இவ்விசை திசைவேகத்தைப் பொறுத்து மாறுபடும்.

வடிவமும்
ஓட்டமும்
உரு/வடிவ
இழுவை
புறணி
உராய்வு
0% 100%
~10% ~90%
~90% ~10%
100% 0%

ஒரு திடப் பொருள் பாய்மத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, இழுவை விசை , மொத்த காற்றியக்க அல்லது நீர்மையியக்க விசையில் பொருளின் திசைவேகத்திற்கு எதிர்த் திசையில் இருக்கும் பாகமாகும். ஆனால், ஏற்றம் என்பது அவ்விசையில், பாய்மம் பாயும் திசைக்கு செங்குத்தாக இருக்கும் பாகத்தைக் குறிப்பதாகும். ஆகவே இழுவை விசை பொருளின் இயக்கத்தை எதிர்க்கிறது.

குறிப்புதவிகள்

சொல்லின் பொருள்குறித்த மாற்றுப்பார்வை

இழ் / இழ என்ற சொல்லுக்கு "கீழ் நோக்கி விடுதல் , தவற விடுதல், Loose, Miss " என்று பொருள்  

ஆனால் இழுவை  என்ற சொல்லுக்கு  "Pull or Drag" என்ற பொருள் பொருத்தமற்றது.

இழப்பு , இழிவு , இழுக்கு , இழை  போன்ற சொல்லுகள் ஒன்று போலவே பொருள்படுகின்றன.

இழப்பு =  Loss, Miss

இழிவு = Shame or Bad

இழுக்கு = Shame

இழை = soft and fluffy thread

இழைதல் = வழுக்கி விடும்படி

எனவே, இழுவை என்ற சொல் 'இழு' என்ற வேரிலிருந்து உண்டானதால் , அதற்கு "Pull or Drag" பொருள் அர்த்தமற்றது.

அதற்கு மாற்றாக 'வலித்தல்' என்ற சொல்லை  "Drag or Pull" என்ற பொருளில் பயன்படுத்தலாம்.

எ - கா : சாணி வலித்தல், உடம்பு வலித்தல்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.