இலா அருண்

இலா அருண் (Ila Arun) ஒரு பிரபலமான இந்திய நடிகை, தொலைக்காட்சி ஆளுமை மற்றும் ராஜஸ்தானிய நாட்டுப்புற பாப் பாடகர் ஆவார். ஒரு தனித்துவமான, ''ஹஸ்கி''குரல் நாட்டுப்புற பாப் பாடல்களுக்கு ஒரு தனித்துவத்தை அளிக்கிறது. அவரது மகள் இஷிதா அருண் லாமே , ஜோதா அக்பர் , ஷாடி கே சைட் எஃபெக்ட்ஸ் மற்றும் சமீபத்தில் பேகம் ஜான் போன்ற பல முக்கிய பாலிவுட் திரைப்படங்களில் அவர் தோன்றியுள்ளார்.

இலா அருண்
2014இல் இலா அருண்
பின்னணித் தகவல்கள்
பிறப்புசோத்பூர், ராஜஸ்தான், இந்தியா
இசை வடிவங்கள்இந்திய திரை இசை, பின்னணிப் பாடகர், இந்திய பாரம்பரிய இசை, பாப் பாடகர்
தொழில்(கள்)பாடுதல், நடிகர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
இசைத்துறையில்1979 முதல் தற்போது வரை

தனிப்பட்ட வாழ்க்கை

ஜோத்பூரில் பிறந்த இவர் ஜெய்ப்பூரில் வளர்ந்தார். அங்கு மகாராணி பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்றார். கடற்படை அதிகாரி அருண் பாஜ்பாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரது சகோதரர்கள் பியுஷ் பாண்டே மற்றும் பிரசூன் பாண்டே ஆகியோர் விளம்பர நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். மேலும் அருண் அவர்களுக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர், ரமா பாண்டே இவர் ''பிபிசி'' பத்திரிகையாளர் மற்றும் ''தூர்தர்ஷன்'' தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர் ஆவார், மற்றொரு சகோதரி திரிப்தி பாண்டே ஒரு கலாச்சார ஆர்வலர் மற்றும் சுற்றுலா நிபுணர் ஆவார். இலா அருணின் தாயும் ஒரு நடிகையாவார்.

பின்னணி பாடல்கள்

அருண் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். நடிகை மாதுரி தீட்சித் நடித்த கல்நாயக் என்ற படத்தில் இடம் பெற்ற''சோலி கே பீச்சே'' என்ற மிக பிரபலமான திரைப்பட பாடலை [[ஆல்கா யாக்னிக்|ஆல்கா யாக்னிக்குடன்]] இணைந்து பாடியுள்ளார், அப்பாடலுக்காக சிறந்த திரைப்பட பின்னணி பாடகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார்.[1] கரன் அர்ஜூனின் ஸ்ரீதேவி நடித்த லம்ஹே திரைப்படத்தில் இடம் பெற்ற புகழ்பெற்ற ''குப் சுப்'' என்ற ம்ற்றொரு பாடலை லதா மங்கேஷ்கருடன் சேர்ந்து பாடியுள்ளார். "மோர்னி பாகா மா போலே" என்ற பாடலாலும் இவர் நன்கு அறியப்படுகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த மிஸ்டர் ரோமியோ என்ற தமிழ்ப் படத்தின் "முத்து முத்து மழை" என்ற பாடலும் இவருக்கு புகழ் சேர்த்தது.[2]

நடிப்பு

அருண் முதலில் லைஃப்லைன் என்ற இந்தி தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடரில் ஜீவன்ரேகா என்ற மருத்துவர் வேடத்தில், தன்வி ஆஸ்மியுடன் இணைந்து நடித்தார். 2008 ஆம் ஆண்டில் ஜோதா அக்பரில், அக்பரின் புத்திசாலித்தனமான செவிலி மற்றும் அரசியல் ஆலோசகரான மஹாம் அஞ்கா வேடத்தில் நடித்தார். சைனா கேட், சின்கரி, வெல் டான் அபா, வெல்கம் டோ ஜஜ்ஜன்பூர், வெஸ்ட் ஈஸ் வெஸ்ட் மற்றும் கதாக் போன்ற பல படங்களில் அவர் நடித்துள்ளார். பேகம் ஜானின் ஷாடி கே சைட் எஃபெக்ட்ஸ் படத்தில் நடிகர்களான வித்யா பாலன் மற்றும் ஃபர்ஹான் அக்தர் ஆகியோருடன் நடித்திருந்தது அவரது மிகச் சமீபத்திய முயற்சியாக இருந்தது.

குறிப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.