இலங்கைத் திரைப்படத்துறை

இலங்கைத் திரைப்படத்துறை 1947 இல் ஆரம்பித்திருக்கிறது.

ஆரம்பம்

இலங்கைத் திரைப்படத்துறையின் ஆரம்பகாலம் முற்று முழுதாக இந்தியாவையே சார்ந்திருந்தது. இலங்கையில் திரைப்படத்துறை தொடங்கிய காலத்தில் இருந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் சிங்களத் திரைப்படங்கள் தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகங்களிலேயே உருப்பெற்றன. அங்கு உருவாக்கப்பட்ட சிங்களத் திரைப்படங்களின் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் எல்லோருமே தென்னிந்தியர்களாகவே இருந்ததினால் அந்தத் திரைப்படங்கள் சிங்கள பாரம்பரியங்களைச் சுட்டிக் காட்டுவனவாக இல்லாமல் பெரும்பாலும் தென்னிந்திய பாரம்பரியங்களைக் கூறுவனவாகவே அமைந்திருந்தன. திரைப்படத்தில் பேசிய மொழி சிங்களமாகவும், பங்கு பற்றிய நடிகர்கள் சிங்களவர்களாகவும் இருந்திருக்கிறார்களே தவிர கதைகள் வசன ஓட்டங்கள் எல்லாமே தென்னிந்திய திரைப்படங்களையே பிரதிபலித்திருந்தன. 1956 க்குப் பின்னரே இலங்கையில் சிங்களப்படங்கள் தயாரிக்கப்பட்டன. 1950 இல் இலங்கையில் தமிழ் திரைப்படத்தயாரிப்பு முயற்சிகள் ஆரம்பித்தன.

சிங்கள மொழி பேசும் திரைப்படம்

முதல் முதலாக சிங்கள மொழி பேசும் திரைப்படம் ஜனவரி 21, 1947இல் திரையிடப் பட்டது. கடவுணு பொரன்டுவ (உடைந்த வாக்குறுதி) என்ற இந்தத் திரைப்படம் தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகத்திலேயே உருப்பெற்றிருந்தது. இந்தத் திரைப்படத்திற்கான இசையை ஆர். நாரயண ஐயர் வழங்கியிருந்தார். அவருக்கு உதவியாளராக இருந்து பணியாற்றியவர் முத்துக்குமாரசாமி ஆவார். இப்படத்தைத் தயாரித்து வழங்கியவர் எஸ். எம். நாயகம். இவர் ஒரு தமிழர்.

சென்னையிலேயே தயாரிக்கப்பட்ட சிங்களப்படங்கள்

  • சுரத்தலி
  • சுஜாதா
  • பைசிக்கிள் ஹொரா

இலங்கையில் தயாரான சில தமிழ் படங்கள்

  • நான் உங்கள் தோழன்
  • பொன்மணி
  • காத்திருப்பேன் உனக்காக
  • மீனவப்பெண்
  • கடமையின் எல்லை
  • நிர்மலா
  • டாக்ஸிடிரைவர்
  • மஞ்சள் குங்குமம்
  • வெண்சங்கு
  • புதிய காற்று
  • வாடைக் காற்று
  • தென்றலும் புயலும்
  • தெய்வம் தந்த வீடு (70 மி.மீ. வண்ணப்படம். தயாரித்தவர் அட்டன் வர்த்தகர்

வி.கே.டி.பொன்னுசாமிபிள்ளை)

  • ஏமாளிகள்
  • கோமாளிகள்
  • அனுராகம்
  • தென்றலும் புயலும்
  • எங்களில் ஒருவன்
  • மாமியார் வீடு
  • நெஞ்சுக்கு நீதி இரத்தத்தின் இரத்தமே
  • அவள் ஒரு ஜீவ நதி
  • நாடு போற்ற வாழ்க
  • பாதை மாறிய பருவங்கள்
  • மர்ம சாசனம்
  • சாபம்
  • நண்பனின் இதயம்

இலங்கைக் கலைஞர்களுடன் படமாக்கப்பட்ட தமிழகத் திரைப்படங்கள்

  • பைலட் பிரேம்நாத்
  • தீ
  • நங்கூரம்
  • மோகனப் புன்னகை



வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.