இறைமறுப்பு வரலாறு

இறை நம்பிக்கைகள் தோன்றிய காலம் தொட்டே, அத்தகைய நம்பிக்கைகளை கேள்விக்குட்படுத்திய, ஐயப்பட்ட, மறுத்த நிலைப்பாடுகளும் இருந்து வந்திருக்கிறன. இந்திய மெய்யியலில் பொருளியவாத, இறைமறுப்புக் கொள்கையை உலகாயதம் முன்னிறுத்தியது.[1] மேற்குலக, கிரேக்க மெய்யியலில் Epicureanism, Sophisம் போன்று மெய்யியல்கள் இறைமறுப்பு கொள்கைகளைக் கொண்டிருந்தன. அறிவொளிக் காலத்தைத் தொடந்த அறிவியலின் வளர்ச்சி பல்வேறு வகைகளில் பொருளியவாத, இறைமறுப்புக் கோட்படுகளுகளுக்கு கூடிய ஆதாரங்களையும் வாதங்களையும் வழங்கி உள்ளது.

கிரேக்க மெய்யியல்

சீன மெய்யியல்

இந்திய மெய்யியல்

முதல் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு
அண்ணாதுரை

இந்திய சிந்தனையில் வேதக் கடவுள்களை பெளத்தமும் சமணமும் மறுத்தன. எனினும் மறுபிறவி, பிறவி சுழற்சி போன்ற பல இந்து கொள்கைகளை ஏற்றுக் கொண்டன. இவற்றையும் மறுத்த மெய்யியல் உலகாயதம் ஆகும். சர்வாகம், நாத்திகம் ஆகியவையும் இறைமறுப்பு தத்துவங்கள் ஆகும்.

தமிழர் மெய்யியல்

பண்டைத் தமிழர்கள் இயற்கை நம்பிக்கை அல்லது உலகாயுதக் கொள்கை உடையினர் என்பது சிலர் கருத்து. அக்காலத்தில் தமிழர் இன்பத்துக்கு முக்கியத்துவம் தந்து உலகில் வாழ்வதை முதன்மையாக கொண்டனர். சங்க காலப் பாடல்கள் பல காதல், வீரம், இன்பம் பற்றி அதிகம் கூறுவது இதற்கு ஒரு சான்றாக கொள்ளப்படுகிறது. இருப்பினும் பழங்காலத்திலேயே தமிழர் மத்தியில் இறை நம்பிக்கை இருந்தது. இந்து சமயம், பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள் தமிழரிடையே வெவ்வேறு காலங்களில் செல்வாக்கு பெற்று இருந்தன, இருக்கின்றன. தமிழ்நாட்டில், ஈழத்தில் நடைபெற்ற இசுலாமிய, ஐரோப்பிய ஆட்சிகளின் போது குறிப்பிடத்தக்க தமிழர்களை இசுலாம், கிறித்தவ சமயங்களுக்கு மதம் மாறினார்கள்.

இருபதாம் நூற்றாண்டில் தமிழர் சிந்தனையில் இறைமறுப்பு மீண்டும் வலுப் பெற தொடங்கியது. மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவு, இறைமறுப்பு உட்பட திராவிட இயக்க கொள்கைகள் செல்வாக்கு பெற்றன. பெரியார், அண்ணாத்துரை, கருணானிதி ஆகிய தலைவர்கள் இறைமறுப்புக் கொள்கை முன்னெடுத்தனர்.

அறிவொளிக் காலம்

பண்டைய மனிதர் உலகம் பற்றி பல தகவல்களை அறியவில்லை. உலகின் இயல்புகள் பற்றி விரிவாக அறிவியல் நோக்கில் விளக்க பண்டைய மனிதரால் முடியவில்லை. அதனால் உலகின் பல விடயங்கள் பற்றி எளிய மீவியற்கை விளக்கங்களை மனிதர் வளங்கினர். இயற்கை நிகழ்வுகள் மீவியற்கை சக்திகளால் நிகழ்கின்றன என்று நம்பினார்கள். எடுத்துக்காட்டாக பண்டை கிரேக்க சமய கடவுள் சியுசு மின்னலை எறிவதாக பண்டை கிரேக்கர்கள் நம்பினார்கள். இன்று மின்னலுக்கு ஒரு அறிவியல் விளக்கம் உண்டு. மக்களுக்கு நோய்கள் ஏற்பட்ட போது பேய் பிடித்து விட்டது, அம்மன் கோபம் கொண்டு விட்டாள் என்று பல மூட நம்பிக்கைகள் இருந்தன. இன்றைய மருத்துவம் en:Germ theory of disease, மரபணுவியல் மற்றும் இதர இயற்கையான விளக்கங்களைத் தருகிறது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. சோ.ந.கந்தசாமி. (2004). இந்திய தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம். தொகுதி 1: பக்கங்கள் 28 - 101

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.