இர்சாத் (நடிகர்)

இர்சாத் என்பவர் மலையாளத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சித் தொடர் நடிகரும் ஆவார்.[1]

திருச்சூர் மாவட்டத்தில் கேச்சேரி அப்து, நபீசா ஆகியோரின் ஐந்து மக்களில் மூன்றாவதாகப் பிறந்தவர். கல்வி கற்றப் பருவத்தில் பல நாடகங்களில் நடித்திருக்கிறார். 1998-ல் பிரணயவர்ணங்கள் என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் நுழைந்தார். துணை நடிகராக நடிக்கிறார். பக்தசனங்களுடைய சிரத்தய்க்கு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். டி.வி. சந்திரன், பி.டி. குஞ்சுமுகமது, பிரியனந்தனன், டோ. பிஜு, மது கைதபிரம் ஆகியோருடன் நடித்துள்ளார்.[1]

நடித்த திரைப்படங்கள்

  • தர்சியம்
  • காற்றும் மழையும்
  • பொட்டாசு போம்ப்
  • புண்யாளன் அகர்பத்தி
  • பெயின்டிங் லைப்
  • புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும்
  • சிக்கார்
  • இந்தியன் ருப்பி
  • லெப்ட் ரைட் லெப்ட்
  • மெமரீசு
  • துரோணா
  • கோக்‌டெயில்
  • பக்தஜனங்களுடைய சிரத்தய்க்கு
  • பாடம் ஒன்னு ஒரு விலாபம்
  • நெய்த்துகாரன்
  • பரதேசி
  • புலிஜன்மம்
  • கதாவசேஷன்
  • வீட்டிலேக்குள்ள வழி
  • சூபி பறைஞ்ச கதை
  • மத்யவேனல்
  • பிரணயவர்ணங்கள்

விருதுகள்

மாதவம் என்ற திரைத் தொடரில் நடித்தமைக்காக, கேரள அரசினது சிறந்த டி.வி. நடிகருக்கான விருது கிடைத்தது.[1] கிரிட்டிக்‌சு அவார்ட் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

சான்றுகள்

  1. "இனி ஞானொரு புள்ளிப்புலி". மாத்ருபூமி. 2013 அக்டோபர் 24. http://archive.is/1Kal9. பார்த்த நாள்: 2013 அக்டோபர் 24.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.