இருபாலுயிரி

இருபாலுயிரி (hermaphrodite) அல்லது இருபால் உடலி என உயிரியலில் விவரிக்கப்படுவது இருபால் உறுப்புகள் ஒருங்கே/ஒரே உடலில் அமையப் பெற்ற ஓர் உயிரினம். அதாவது ஆண் பால் உறுப்பும், பெண் பால் உறுப்பும் ஒரே உடலில் இடம் பெற்றிருத்தலையே நாம் அழிதூஉ/இருபாலுடலி என விளிக்கிறோம். இது பெரும்பான்மையான முதுகெலும்பற்ற உயிரினங்களிலும், விதைமூடியிலித் தாவரங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. இதற்கு வழக்கில் அலி அல்லது பேடு என்றப் பிற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

இரண்டு மண்புழுக்கள் புணர்தல். மண்புழுக்கள் அழிதூஉ அல்லது இருபாலுடலி (இருபாலி) வகையைச் சேர்ந்த உயிரினம்

நாம் பரவலாக அறிந்திருக்கூடிய மண்புழுக்களில் இப்பண்பு இடம் பெற்றுள்ளது. இவற்றிற்கென்று தனியாகப் பாலமைப்புக் காணப்படுவதில்லை. இவை இனப்பெருக்கத்தின் போது ஒரு பகுதி விந்துவைப் படைக்கும் ஆணாகவும் மற்றொன்று முட்டைகளைப் படைக்கும் பெண்ணாகவும் செயலாற்றும். எல்லா மண்புழுக்களும் முட்டையிடும் பண்பை அல்லது திறத்தைப் பெற்றவை.

மனிதர்களிலும் இந்நிலை காணப்படலாம். ஆனால் அது போலி இருபால் நிலை (pseudo hermaphroditism) ஆகும். உண்மையான இருபால் நிலை மாந்தருள் மிக மிக அரிதாகவே காணப்படும்.

இதேப்போல் பூக்களில் (பெண்)சூல்களும் (ஆண்) கேசரங்களும் ஒன்றில் காணப்படுவதும் உண்டு. ஐலொசிரியசு உண்டாட்சு, ஒரு இருபாலுடலித் தாவரமாகும். இதன் பூவில் சூலும் கேசரமும் ஒருசேரக் காணப்படுகிறது.

சொற்பிறப்பியல்

கிரேக்கத் தொன்மவியல் கதாபாத்திரம் ஹெர்மாஃபுரோடட்டசு

ஹெர்மாஃபுராடைட் எனும் ஆங்கிலச் சொல் ஹெர்மிஸ் மற்றும் அஃப்ராடைட் எனும் கிரேக்கக் கடவுளரின் பெயரில் இருந்து வந்தது. இவர்களுக்குப் பிறந்த மகன் தேவதையுடன் இணைக்கப்பட்டு இரு பால் பண்புகளையும் பெற்றவனாக ஆக்கப்பட்டான்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.