இரவு வரவில்லை (நூல்)

இரவு வரவில்லை என்பது ஒரு கவிதைத் தொகுப்பு நூல். இந் நூலில் கவிஞர் வாணிதாசன் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இது நாட்டுடமையாக்கப்பட்ட நூலாகும்.

இரவு வரவில்லை
நூலாசிரியர்கவிஞர் வாணிதாசன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைகவிதை
வெளியீட்டாளர்ஐயை பதிப்பகம்
வெளியிடப்பட்ட திகதி
1963
பக்கங்கள்88

நூல் பற்றி

இந்நூலிலுள்ள கவிதைகள் அனைத்தும் இதழ்களிலும், கவியரங்குகளிலும், நூல் மலர்களிலும் வெளிவந்தவை ஆகும். இந்நூல் வாணிதாசனின் பன்னிரண்டாவது நூலாகும். 1963ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்நூல், 88 பக்கங்களைக் கொண்டுள்ளது.

பதிப்புரை

பதிப்புரையில் சில வரிகள் பின்வருமாறு: "தமிழ் மக்களின் வாழ்க்கை அகம், புறம் என்னும் இரு வகையுள் அடங்கும். அதனை விளக்கும் இலக்கியமே இரவு வரவில்லை என்பதாகும். அகவிலக்கணத்திற்கு ஓர் இலக்கியமாய் இலங்குகின்றது இதன் முதற்பகுதியான இன்பப் பகுதி. ஏனையவை புறவிலக்கணத்திற்கு எடுத்துக்கட்டாய் இலங்குகின்றன." - ஐயை பதிப்பகத்தார்.

நூலின் உள்ளடக்கம்

இன்பம்

  1. இரவு வரவில்லை
  2. என்ன செய்வாய்?
  3. உனக்கேது காதல்?
  4. துயர் அறிவாரோ தோழி
  5. ஆர் ஓலை விட்டார்
  6. எங்கிருந்தால் என்ன?
  7. மறந்து போ!
  8. முல்லையும் வண்டும்
  9. விழியோ? அல்ல! அல்ல!
  10. நீ இல்லாச் சில நாட்கள்!
  11. சிரித்தாளே!
  12. பக்கத்தில் நீ இல்லை!
  13. முடியாதே!
  14. வாராயோ?
  15. காளையின் கடிதம்
  16. அவளில்லா வாழ்வு!
  17. அவளும் நானும்
  18. கேட்டதுண்டோ?
  19. உண்டோ தோழி?
  20. அவனினும் கொடியள்!
  21. ஓடோடி வந்தாள்!
  22. பிரிவு
  23. என்ன முழுகிவிடும்?
  24. இதுவல்ல வேளை!

பூக்காடு

  1. கனவு ஒரு கானல்
  2. எழுத்தாளர் கடமை
  3. கார்த்திகை விளக்கு
  4. அடங்கா ஆவல்!
  5. சுதந்தரம்
  6. அகந்தை அற்றுவிட்டால்..?
  7. அதுவே போதும்!
  8. கோலெடுத்தால்..
  9. சொக்கிய நாள் வருமோ?
  10. விரைந்து வா!
  11. போவோம் புதுவைக்கு!
  12. யார் அவள்?
  13. ஏனோ?
  14. பேசவில்லை!

கையறுநிலை

  1. இதுவா கைம்மாறு?
  2. கொடுந்துயரம் அந்தோ!
  3. யாம் மறக்கப் போமோ?
  4. மண்ணோடு மண்ணானதே!

பன்மணித்திரள்

  1. மறப்பதுண்டோ காதல்?
  2. குடியாட்சி
  3. தங்கத்தாமரை மலர்ந்ததுவே!
  4. எல்லோரும் செத்தவரோ?
  5. தலைமைக் கவிதை
  6. பாரிக்குத் தாலாட்டு
  7. வாழ்வீர்!
  8. நன்றி உங்கள் வருகைக்கு!
  9. எங்கள் அண்ணா!
  10. கலைஞர் வாழ்க!
  11. பாரி வாழ்க!

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.