இரயில்வே பாதுகாப்புப் படை

இரயில்வே பாதுகாப்புப் படை (Railway Protection force) அல்லது ஆர்.பி.எஃப். இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். இந்திய இரயில்வேயின் பாதுகாப்பிற்கும், பயணிகளின் பாதுகாப்பிற்கும் உருவாக்கப்பட்ட படையாகும். லக்னௌவில் உள்ள ஜக்ஜீவன் ராம் இரயில்வே பாதுகாப்புப் படைப் பயிற்சிப்பள்ளியில் ஆரம்பப் பயிற்சி, புதுமுகப் பயிற்சி, சிறப்புப் பயிற்சிகள் ஆகியவை அளிக்கப்படுகின்றன.[1] இயற்கை விபத்தின் போதோ அல்லது சமூக விரோதிகளுடன் போராடும் போதோ ஏற்படும் பொருள் மற்றும் உயிர் இழப்பிற்கு மத்திய அரசின் உதவித் தொகையான இரயில் சுரக்ஷ்சா கல்யாண் நிதி (RSKN) பயன்படுத்தப்படுகிறது. மொத்தம் 65,000 வீரர்களைக் கொண்டுள்ளது.

குறிக்கோள்கள்

  • ரயில் பயணிகள், பயணிகள் பகுதி மற்றும் ரயில்வே சொத்து ஆகியவற்றை பாதுகாக்க குற்றவாளிகளுடன் சண்டையிடுதல்.
  • சமூக விரோத கூறுகள் அனைத்தையும் நீக்கி இரயில்வே பயணிகளுக்கும், இரயில்வே சொத்துக்களுக்கும் பாதுகாவல் தருதல்.
  • மகளிர் மற்றும் குழந்தை கடத்தலைத் தடுக்க விழிப்புணர்வுடன் இருத்தல் மற்றும் ரயில்வே பகுதிகளில் காணப்படும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உரிய நடவடிக்கை எடுத்து மறுவாழ்வு அளித்தல்.
  • இதர இரயில்வே அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றி இந்திய இரயில்வேயின் மதிப்பை அதிகரித்தல்
  • அரசு இரயில்வே காவலர்கள்/ உள்ளூர் காவலர்காளுக்கும் மற்றும் இரயில்வே நிர்வாகத்திற்கும் பாலமாக செயல்படுதல்
  • அனைத்து நவீன தொழில்நுட்பத்தை பின்பற்றியும், சிறந்த மனித உரிமை நடைமுறைகளைக் கொண்டும், மேலாண்மை உத்திகளுடன் பயணிகளை பாதுகாத்தல்

மேற்கோள்கள்

  1. Railway Protection Force
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.