இரண்டாவது எசுப்பானியக் குடியரசு

இரண்டாவது எசுப்பானியக் குடியரசு (Second Spanish Republic) என்பது 1931, ஏப்ரல் 14 முதல் 1939 ஏப்ரல் 1 வரையான காலப்பகுதியில் எசுப்பெயினில் இருந்த அரசைக் குறிக்கும். 1931 ஆம் ஆண்டில் நகரப் பகுதிகளில் இடம்பெற்ற தேர்தல்களில் குடியரசுவாதிகள் பெரும்பான்மையாக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அப்போதைய எசுப்பானிய மன்னரான 13ம் அல்போன்சோ நாட்டைவிட்டு வெளியேறியதன் பின் இந்த அரசு பதவிக்கு வந்தது. எசுப்பானிய உள்நாட்டுப் போரின் இறுதியில், 1939 ஆம் ஆண்டு, பிரான்சிசுக்கோ பிராங்கோவின் தலைமையிலான தேசியவாதப் படைகளிடம் குடியரசுப் படை தோல்வியடையும் வரை இது நீடித்தது.

எசுப்பானியக் குடியரசு
República Española

1931–1939
கொடி சின்னம்
குறிக்கோள்
"Plus Ultra"  (இலத்தீன்)
"இன்ன்னும் அப்பால்"
நாட்டுப்பண்
El Himno de Riego
தலைநகரம் மாட்ரிட்
மொழி(கள்) எசுப்பானியம்
அரசாங்கம் குடியரசு
குடியரசுத் தலைவர்
 -  1931–1936 Niceto Alcalá-Zamora
 - 1936–1939 Manuel Azaña
சட்டசபை பேராளர் அவை
வரலாற்றுக் காலம் உலகப் போர்களுக்கு இடையிலான காலப்பகுதி
 - முடியாட்சி ஒழிக்கப்பட்டது ஏப்ரல் 14 1931
 - எசுப்பானிய உள்நாட்டுப் போர் 1936–1939
 - நாட்டுக்கு வெளியிலமைந்த குடியரசு கலைக்கப்பட்டது சூலை 15 1939
நாணயம் எசுப்பானிய பெசேட்டா
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.