இரண்டாம் ராமேசஸ்
இரண்டாம் ராமேசஸ் - 19வது வம்சத்தின் முன்றாவது எகிப்திய மன்னராவார். எகிப்தை ஆட்சி செய்த அரசர்களிலேயே சிறந்த மற்றும் வலிமை வாய்ந்த அரசராக போற்றப்படுபவர் இரண்டாம் ராமேசஸஸ். இவர் பிறந்த ஆண்டு கிமு 1305. இவர் தனது 14ம் அகவையில் இளவரசராகவும், 20ம் அகவையில் எகிப்து அரியணையேறி கிமு 1279 முதல் கிமு 1213 முடிய மொத்தம் 66 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் மன்னராக அட்சிபுரிந்தார். தன் அட்சிகாலத்தில் மொத்தம் 14 செத் விழாக்களை கொண்டடிய பெருமை இவருக்கு உண்டு, மற்ற எகிப்திய மன்னர்களோடு ஒப்பிடும் பொழுது இது ஒரு சாதனையாகும்.

அபு ஸிம்பலில் இருக்கும் நான்கு சிலைகளில் ஒன்று.
கட்டிடக் களங்கள்
இரண்டாம் ராமேசசின் ஆட்சிகாலத்தில் எழுப்பப்பட்ட மற்றும் செம்மைபடுத்தப்பட்ட கட்டிடக் களங்கள் பின் வருமாறு.
- பை-ராமேசஸ்
- ராமேசியம்
- லக்சோர் கோயில்
- கர்னாக் கோயில்
- அபு சிம்பல் கற்கோயில்
- நெப்பர்தாரின் கல்லறை (டூம்)
- KV5 இளவரசர்களின் கல்லறை
- KV7 இரண்டாம் ராமேசஸின் கல்லறை(டூம்)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.