இரண்டாம் அலைப் பெண்ணியம்

இரண்டாம் அலைப் பெண்ணியம் (second-wave feminism) என்பது மறைவாக இருக்கும் பெண் ஒடுக்குமுறைகளை, குறிப்பாக பாலியல், குடும்பம், வேலை போன்ற தளங்களில் பெண்களுக்கு இருக்கும் தடைகளைத் தகர்ப்பதற்காக 1960 களில் தொடங்கி 1970 களின் இறுதிவரை ஐக்கிய அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைச் சுட்டுகிறது.[1] இது பின்னர் உலகளாவிய அளவில் ஐரோப்பிய நாடுகள் மட்டுமன்றி, துருக்கி[2] இசுரேல் போன்ற நாடுகளுக்கும் பரவியது.[3]

முதல் அலைப் பெண்ணியம் பெண்களுக்கான சம உரிமை, வாக்குரிமை, சொத்துரிமை ஆகியவற்றில் கவனம் செலுத்த, இரண்டாம் அலைப் பெண்ணியம் தன் நிகழ்ச்சிநிரலை அகன்ற பல சிக்கல்களை உள்ளடக்கி விரிவாக்கியது: பாலுணர்வு, குடும்பம், வேலையிடம், இனப்பெருக்க உரிமைகள், இயல்பான சம உரிமைகளோடு அலுவல்சார் சட்ட உரிமைகள் போன்றவற்றைப் போராட்டக் களமாக மாற்றியது.[4] இரண்டாம் அலைப் பெண்ணியம் வீட்டு வன்முறை, திருமணவழிக் கற்பழிப்பு, கற்பழிப்பு நெருக்கடி, அடிபட்ட பெண்களுக்கான காப்பிடம், பொறுப்பு மாற்றம். மணவிலக்குச் சட்டம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தியது. இப்பெண்ணியவாதிகள் வணிக முயற்சிகளில் இறங்கி, புத்தகக் கடைகள், கடன் ஒன்றியங்கள், உணவகங்கள் ஆகியவற்றை நடத்தி அவற்றைத் தாம் கூடுமிடங்களகவும் பொருளியல் வளர்ச்சிப் பொறிகளாகவும் பயன்படுத்தினர்.[5]

இந்தப் பெண்ணியக் கால கட்டம் பாலியல், ஆபாசம் தொடர்பான பெண்ணிய உட்கருத்து வேறுபாட்டுப் பூசல்களுடன் ஐக்கிய அமெரிக்காவில் 1980 களில் முடிவுக்கு வந்தாக, பல பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள்.இதன் தொடர்ச்சியாக 1990 களில் மூன்றாம் அலைப் பெண்ணிய இயக்கம் தொடங்கியது. கீழே குறிப்பிட்டபடி,.[6]

பருந்துப் பார்வை

இரண்டாம் உலகப்போருக்குப் பின் பெண்களின் புதிய கூடுதலான வீட்டிருப்புக்கு எதிர்வினையாக இரண்டாம் அலைப் பெண்ணியம் வட அமெரிக்காவில் சற்று காலந்தாழ்த்தியே எழுந்ததுI: போருக்குப் பிந்தைய 1940 களின் முன்னெப்போதும் இல்லாத பொருளியல் பெருவளர்ச்சியும் குழந்தைகள் பெருக்கமும், குடும்பம் சார்ந்த புறநகர் வளர்ச்சியைத் தோற்றுவித்த்து. கருத்தியலான இணையர் மணங்களை உருவக்கி கருநிலைக் கௌடும்பங்களை உருவாக்கியது. இந்தப் புறநகர் வாழ்க்கை அக்கால ஊடகங்களில் விரிவாகப் பதிவாகியுள்ளது; தொலைக்காட்சிப் படங்களாகிய தந்தை அறிவார் சிறந்ததை (Father Knows Best), பீவருக்கு இட்டுவிடுங்கள் (Leave It to Beaver) ஆகியவை பெண்களின் வீட்டிருப்பைக் கருத்தியலானதாக காட்டின.[7]

இரண்டாம் அலைப் பெண்ணியத்துக்குச் சில முதன்மையான நிகழ்ச்சிகள் அடிகோலின. பிரெஞ்சு எழுத்தாளர் சைமன் தெ பொவாயிர், 1940 களில் தந்தைவழிச் சமூகத்தில் பெண்கள் பிறத்தியாராகக் கருதப்படுவதைச் சுட்டிக் காட்டினார். இவர் 1949 ஆம் ஆண்டு வெளியிட்ட இரண்டாம் பாலினம் (The Second Sex) எனும் நூலில் ஆண்மையக் கருத்தியலே இயல்பான வரன்முறையாக ஏற்று நடைமுறைப்படுத்தப்படுவதைச் சமகால வளர்ச்சித் தொன்மங்கள் காடுவதாகவும் பெணகள் மாத விலக்குக்கும் கருத்தரிக்கவும் பாலூட்டவும் ஏற்றவர்கள் என்பதே அவர்களை "இரண்டாம் பாலினமாக" ஒதுக்க போதிய காரணமாகாது என வாதிட்டார் "second sex".[8]

இந்த நூல் பிரெஞ்சு மொழியில் இருந்து அதில் உள்ள சில பகுதிகளை வெட்டிவிட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டு அமெரிக்காவில் 1953 இல் வெளியிடப்பட்டது.[9]

வணிக முயற்சிகள்

பெண்ணிய முனைவாளர்கள் பெண்ணிய வணிகங்களைத் தொடங்கினர்; இவற்றில், பெண்கள் புத்தகக் கடைகள், பெண்களுக்கான கடன்தரும் ஒன்றியங்கள், பெண்ணிய ஊடகங்கள், பெண்ணிய அஞ்சல் வரிசை அட்டவணைகள், மகளிர் உணவகங்கள் feminist record labels. இந்த வணிகங்கள் இரண்டாம், மூன்றாம் அலைப் பெண்ணியக் காலகட்டங்களில் அதாவது, 1970 களிலும் 1980 களிலும் 1990 களிலும் பெருவளர்ச்சி கண்டன.[10][11]

இசையும் பொதுப் பண்பாடும்

"நானொரு பெண்"

ஒலிவியா பதிவுகள்

மகளிர் இசை

தொடக்கமும் தன்னுணர்வான எழுச்சியும்

தாராளப் பெண்ணிய இயக்கம்

முனைப்பான பெண்ணிய இயக்கம்

சமூக மாற்றங்கள்

மகப்பேறு கட்டுபாட்டைப் பயன்படுத்தல்

வீட்டு வன்முறையும் பாலியல் நெருக்கடிகளும்

கல்வி

தலைப்பு ஒன்பது

இருபாலார் கூட்டுக்கல்வி

ஏழு செவிலியர் கல்லூரி

மிசிசிபி மகளிர் பல்கலைக்கழகம்

மில்சு கல்லூரி

பிற கல்லூரிகள்

நுண்ணாய்வு

மேற்கோள்கள்

  1. Sarah Gamble, ed. The Routledge companion to feminism and postfeminism (2001) p. 25
  2. Badran, Margot, Feminism in Islam: Secular and Religious Convergences (Oxford, Eng.: Oneworld, 2009 p. 227 (
  3. Freedman, Marcia, Theorizing Israeli Feminism, 1970–2000, in Misra, Kalpana, & Melanie S. Rich, Jewish Feminism in Israel: Some Contemporary Perspectives (Hanover, N.H.: Univ. Press of New England (Brandeis Univ. Press) 2003 pp. 9–10
  4. "women's movement (political and social movement)". பார்த்த நாள் 2012-07-20.
  5. Davis, Joshua Clark (2017-08-08) (in en). From Head Shops to Whole Foods: The Rise and Fall of Activist Entrepreneurs. Columbia University Press. பக். 129–175. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780231543088. https://books.google.com/books?id=UjEtDwAAQBAJ&pg=PT146&dq=head+shops&hl=en&sa=X&ved=0ahUKEwjd04HtgMnVAhUB2oMKHb7uBDEQ6AEIMjAC#v=onepage&q=feminist%20business&f=false.
  6. Murray Knuttila, Introducing Sociology: A Critical Approach (4th ed. 2008 Oxford University Press)
  7. Simone de Beauvoir, The Second Sex, 1949.
  8. Moi, Toril (2002). "While we wait: The English translation of The Second Sex". Signs: Journal of Women in Culture and Society 27 (4): 1005–1035. doi:10.1086/339635.
  9. Echols, Alice (1989). Daring to be Bad: Radical Feminism in America, 1967–1975. University of Minnesota Press. பக். 269–278.
  10. Hogan, Kristen (2016). The Feminist Bookstore Movement: Lesbian Antiracism and Feminist Accountability. Durham, North Carolina: Duke University Press.

மேலும் படிக்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.