இரட்டை இடுக்கி முடிச்சு

இரட்டை இடுக்கி முடிச்சு (Double constrictor knot) என்பது மிகத்திறம் வாய்ந்த பிணைப்பு முடிச்சுக்களுள் ஒன்று. இது, பொதுவான "இடுக்கி முடிச்சிலும்" வலிமையானதும், பாதுகாப்பானதும் ஆகும். அடிப்படையான இடுக்கி முடிச்சுக்கு இன்னொரு திருப்பம் ஒன்றைச் சேர்ப்பதன் மூலம் இந்த முடிச்சு இடப்படுகின்றது. மெழுகு பூசப்பட்ட கயிறுகள் போன்ற வழுக்கக்கூடிய கயிறுகளைப் பயன்படுத்தும்போது இம்முடிச்சுப் பெரிதும் பயனுள்ளது.[1] ஒன்றுக்கு மேற்பட்ட திருப்பங்களை மேலதிகமாக இட்டால் இதன் பாதுகாப்புக் கூடுவதில்லை என்பதுடன், முடிச்சைச் சீராக இறுக்குவதும் கடினமாகி விடும்.

  1. பொருளை ஒருமுறை சுற்றிச் செயல்முனையை நிலைப்பகுதிக்கு மேலாகத் திரும்பவும் கொண்டுவரவேண்டும்.
  2. இதே வழியில் இரண்டாவது திருப்பத்தைச் செய்ய வேண்டும்.
  3. செயல்முனையை நிலைப்பகுதிக்கு மேலாகக் கொண்டுவந்து, பின்னர் riding திருப்பத்துக்குக் கீழாகவும் நிலைத்தபகுதிக்குக் கீழாகவும் கொண்டுவந்து riding திருப்பத்துக்குக் கீழே ஒரு overhand முடிச்சை உருவாக்க வேண்டும்.
  4. முனைகள் படத்தில் காட்டியபடி திருப்பங்களிடையே வெளிப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முடிச்சில் உள்ள இழுவிசையைச் ஒரேதன்மைத்து ஆக்குவதற்காக முடிச்சைக் கவனமாகச் சீராக்க வேண்டும். முடைச்சை ஓரளவு இறுக்கியபின் முனைகளை இழுத்து உறுதிப்படுத்த வேண்டும்.

குறிப்புகள்

  1. Brion Toss, The Complete Rigger's Apprentice (Camden, Maine: International Marine, 1998)

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.