இயக்க மகளிர்

இயக்க மகளிர் என்பவர்கள் சிவபெருமானின் மகனான முருகனினை வளர்த்த ஆறு பெண்களாவார்கள். [1] இவர்களை கார்த்திகைப் பெண்டீர், கார்த்திகைப் பெண்கள் எனவும் அழைப்பர்.

தொன்மம்

சிவபெருமானின் ஆறு முகங்களிலிருந்து ஆறு நெருப்புபொறிகள் வெளிவந்தன. அவற்றை வாயுபகவான் எடுத்துச் சென்று சரவணப் பொய்கையில் சேர்த்தார். அப்பொறிகள் ஆறு குழந்தைகளாயினர். அவர்களை கார்த்திகைப் பெண்டீர் எடுத்து வளர்த்தனர். பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் போது ஆறுபேரும் ஒன்றாகி ஆறுமுக முருகனாகினார்.

ஒரு முறை சிவபெருமான் கயிலாயத்தில் நந்தி, பிருங்கி, மகானர் முதலான சிவகண நாதர்களுக்கும் மற்றும் சிவகனங்கள், சனகர் முதலிய நான்கு முனிவர்களுக்கும் அட்டமா சித்திகளை உபதேசித்தார். அப்போது அங்குவந்த இயக்க மகளிர் சிவபெருமானிடம் அட்டமா சித்திகளை உபதேசிக்க வேண்டினர். சிவபெருமான் அவர்களை உமையைப் பூசைச் செய்து சக்திகளைப் பெற்றுக்கொள்ளும்படி கூறினார். அப்பெண்கள் உமையை வணங்கி அட்டமா சித்திகளைப் பெற்றனர்.

இவற்றையும் காண்க

கந்த புராணம்

ஆதாரங்கள்

  1. தினமலர் பக்திமலர் 12.03.2015 பக்கம் 9-10
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.