இமாம் சதுக்கம்
இமாம் சதுக்கம் (Imam Square) அல்லது நக்ஷே ஜகான் சதுக்கம் (Naqsh-e Jahan Square; பாரசீகம்: میدان نقش جهان; மைதானே நக்ஷே ஜகான்; பொருள்: "உலக சதுக்கத்தின் உருவம்"; முன்னைய பெயர் சா சதுக்கம் [Shah Square]), என்பது ஈரானின் இஸ்பகான் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள சதுக்கம் ஆகும். 1598 இற்கும் 1629 இற்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட இது முக்கியமானதொரு வரலாற்றுப் பகுதியும், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களமும் ஆகும். இது 160 மீட்டர்கள் (520 ft) அகலமும் 560 மீட்டர்கள் (1,840 ft) நீளமும் உடையது (89,600 சதுர மீட்டர்கள் (964,000 sq ft) பரப்பு).[1]
நக்ஷே ஜகான் சதுக்கம் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
![]() | |
வகை | கலாச்சாரம் |
ஒப்பளவு | i, v, vi |
உசாத்துணை | 115 |
UNESCO region | ஆசியா பசுபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1979 (3 வது தொடர்) |
சா பள்ளிவாசல் சதுக்கத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அதன் மேற்குப் பகுதியில் அலி கபு அரண்மனை உள்ளது. சதுக்கத்தின் கிழக்குப் பக்கத்தில் செய்க் லொட்ப் அல்லா பள்ளிவாசலும், வடக்குப் பக்கத்தில் பெரிய அங்காடிக்கான கெய்சாரியா வாயிலும் உள்ளது. தற்போது சா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமைத் தொழுகை இடம்பெறுகிறது.
இச்சதுக்கம் ஈரானிய 20,000 றியால் நாணயத்தின் பின் பக்கத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.[2]
வரலாறு
1598 இல், சா அபாஸ் தன்னுடைய அரச தலைநகரை வட-மேற்கு நகரான குவாஸ்வின்னை இஸ்பகானுக்கு நகர்த்தத் தீர்மானித்தபோது, முற்றிலும் ஒரு நகரை மீள் உருவாக்கும் பாரிய நிகழச்சித்திட்டங்களில் ஒன்றை பாரசீக வரலாற்றில் முன்னெடுத்தார். இஸ்பகான் மத்திய நகரை தெரிவு செய்கையில், "வாழ்வு கொடுக்கும் ஏரி" என்று சொல்லப்படும் சாயான்தேயினால் வளமூட்டப்பட்ட, வலுவான பயிர்ச்செய்கையின் பாலைவனச் சோலைத் திகழ்ந்த மழையற்ற நிலப்பரப்பின் பரந்த பகுதியின் மத்தியில், அபாஸ் உதுமானியப் பேரரசு, உஸ்பெக் ஆகியோரால் எதிர்காலத்தில் தாக்குதலிலிருந்து விலகியிருக்க தொலைவில் அமைத்தார். அத்துடன் பாரசீக வளைகுடா மீது அதிக கட்டுப்பாட்டையும் கொண்டார். இது விரைவில் இடச்சு, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் என்பவற்றின் முக்கிய வாணிகப் பாதையாக மாறியது.[3]
இதன் பிரதான கட்டடக்கலைஞரான சாயக் பாய்,[4] சா அப்பாசின் இரு முக்கிய முதன்மைத்திட்டங்கள் மீது கவனத்தைக் கொண்டிருந்தார். அவையாவன: எல்லா வெளிநாட்டு புகழ்மிக்கவர்களின் வாழ்விடம் உட்பட்ட, நகரத்தின் முக்கிய நிறுவனங்களால் சூழப்பட்ட சகர் பா வளாகம், மற்றும் இமாம் சதுக்கம் அல்லது நக்ஷே ஜகான் சதுக்கம் ("உலக சதுக்கத்தின் உருவம்").[5] சா ஆட்சிக்கு வரமுன்னர், பாரசீகம் அதிகாரக் கட்டமைப்பை குறைத்திருந்தது. அதனால், வேறுபட்ட அமைப்புக்கள் அதிகாரத்திற்காக சண்டையிட்டன. அவற்றில் தரைப்படை, பல்வேறு மாகாணங்களில் இருந்து பேரரசை முழுமைபெறச் செய்த ஆளுனர்களும் ஆகியோர் அதில் ஈடுபட்டனர். சா அப்பாஸ் இந்த அரசியல் கட்டமைப்பை வலுவிழக்கச் செய்து, பாரசீகத்தின் பெரும் தலைநகராக இஸ்பகானை மீள் உருவாக்க விரும்பியது அதிகாரத்தை மையப்படுத்தலில் முக்கிய பகுதியாக இருந்தது.[6] பாரசீகத்தின் மூன்று பிரதான பகுதிகளான மஜ்ஜித் இ சாவினைப் பிரதிநிதுத்துவப்படுத்திய சமயக் குருக்களின் அதிகாரம், பேரரசு அங்காடியை பிரதிநிதுத்துவப்படுத்திய வர்த்தகர்களின் அதிகாரம், அலி கபு அரண்மனையில் உள்ள சாவின் அதிகாரம் என்பவை ஒன்றாக இருக்க சதுக்கத்தின் கூர்மதி கட்டப்பட்டது.
அரச சதுக்கம்
அரச சதுக்கம் "சா"வும் மக்களும் சந்திக்கும் இடமாகும்.

இவற்றையும் பார்க்க
உசாத்துணை
- http://www.pps.org/great_public_spaces/one?public_place_id=672
- Central Bank of Iran. Banknotes & Coins: 20000 Rials. – Retrieved on 24 March 2009.
- Savory, Roger; Iran under the Safavids, p. 155.
- Kheirabadi Masoud (2000). Iranian Cities: Formation and Development. Syracuse University Press. pp. 47.
- Sir Roger Stevens; The Land of the Great Sophy, p. 172.
- Savory; chpt: The Safavid empire at the height of its power under Shāh Abbas the Great (1588–1629)
வெளி இணைப்புகள்
- Naqsh-i Jahan Square in Google Maps
- The Mosque Sheikh Lotfollah A Documentary film directed by Manouchehr Tayyab (15 min)
- "Emam Sq." at Cultural Heritage Organization of Iran
- Naqsh-e Jahan Square Video Documentary of Naqsh-e Jahan Square and Surrounding Buildings, by Aslı Pınar Tan (41:45 mins)
- See the 360 degrees VR panorama
- More Pictures, Tishineh