இந்திய புதையல் சட்டம், 1878

இந்தியப் புதையல் சட்டம், 1878 இந்தியாவில் ஏதாவது மதிப்புடைய எந்தவொரு பொருளும் பூமிக்குள் புதைந்திருந்து அது கண்டுபிடிக்கப்பட்டால் அது “புதையல்” எனப்படும். இந்தியப் புதை பொருள் சட்டம், 1878 பிரிவு 4ன் படி[1] ரூ.10/-க்கு மேற்பட்ட மதிப்புடைய எந்தவொரு புதை பொருளும் கண்டறிப்பட்டால், புதையலை கண்டுபிடித்தவர் இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு எழுத்து மூலமாக விவரத்தை தெரிவித்து கண்டறியப்பட்ட புதையலை அருகில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்திட வேண்டும்.[2]

புதையலை பராமரித்தல்

புதையல் கண்டுபிடிக்கப்பட்ட விவரம் குறித்து எவரும் எழுத்து மூலமான தகவல் தெரிவிக்காவிடில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரே அப்பொருளை கைப்பற்றி அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.

புதைபொருள் மத சம்பந்தப்பட்ட பொருளாக (சிலைகள் போன்றவை) இருப்பின், அதனை அரசு அருங்காட்சியகத்தின் அனுமதியை எதிர்நோக்கி வருவாய் துறை அதிகாரிகளே தங்கள் பாதுகாப்பில் வைத்திடலாம்.

உள்ளூர் மக்களால் வழிபடுதற்குரிய பொருளாக புதையல் இருப்பின், அதனை மாவட்ட ஆட்சியர் தன் விருப்பு அதிகாரத்தின்படி உள்ளூர் கிராம மக்கள் பொறுப்பில் விட முடிவு மேற்கொள்ளலாம். (அரசாணை எண் 1187 வருவாய்த்துறை நாள்:19.3.62)

தண்டனை

புதையலை கண்டெடுத்தவர் பிரிவு 4ன் கீழ் ஒப்படைக்கவோ தகவல் அறிவிக்காமல் மறைக்கவோ செய்தால் புதையல் மதிப்பின் பங்கு தொகை வழங்க வேண்டியதில்லை. மேலும் ஒரு வருடம் வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டையுமே விதிக்கலாம். புதையல் கண்டெடுத்த இடத்தின் உரிமையாளர் தகவல் அளிக்காவிட்டால் சட்டப்பிரிவு 20 மற்றும் 22ன் கீழ் ஆறு மாதம் வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டையும் விதிக்கலாம்.

மேற்கோள்கள்

  1. Treasure Trove Act, 1878
  2. புதையல்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.