இதயத்திருடன் (திரைப்படம்)

இதயத்திருடன் (Idhaya Thirudan) சரண் இயக்கத்தில், 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜெயம் ரவி, காம்னா ஜெத்மலானி (அறிமுகம்), பிரகாஷ் ராஜ், சந்தானம், நாசர், வாணி விஸ்வநாத் மற்றும் பலர் நடித்துள்ளார். கைலாசம் பாலசந்தர் மற்றும் புஷ்பா கந்தசாமி தயாரிப்பில், பரத்வாஜ் இசையில், 10 பிப்ரவரி 2006 ஆம் தேதி வெளியானது. துருக்கியிலும் வட சைப்ரஸிலும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

நடிகர்கள்

ஜெயம் ரவி, காம்னா ஜெத்மலானி (அறிமுகம்), பிரகாஷ் ராஜ், சந்தானம், நாசர், வாணி விஸ்வநாத், கு. ஞானசம்மந்தம், கிருஷ்ணா, நீலிமா ராணி, காஜல் பசுபதி, ஜெகன், மதன் பாப், எம். எஸ். பாஸ்கர், காக்கா ராதாகிருஷ்ணன், ரமேஷ் கண்ணா, மீரா கிருஷ்ணன்.

கதைச்சுருக்கம்

தீபிகா (காம்னா ஜெத்மலானி) தன் தாய் சுதா ராணியின் (வாணி விஸ்வநாத்) வளர்ப்பு அவளுக்கு சற்றும் பிடிக்கவில்லை. தன் தாயை கோபப்படுத்தும் விதமாக, மகேஷ் என்ற பெயர் கொண்ட கற்பனை நபருக்கு தன் புகைப்படங்களை அனுப்புகிறாள். ஆனால், மகேஷ் என்ற பெயரில் கேட்டரிங் மாணவர் ஒருவன் இருந்தான். மகேஷ் தீபிகாவை எங்கு சென்றாலும், பின் தொடர்ந்தான்.

இந்நிலையில், மயில்ராவணன் (பிரகாஷ் ராஜ்) என்ற போலீஸ் அதிகாரி தீபிகாவை திருமணம் செய்ய விரும்புகிறார். மகேஷிற்கும் தீபிகாவிற்கும் இடைவெளியை உண்டாகும் விதமாக, சுதா ராணியுடன் கூட்டு சேருகிறார் மயில்ராவணன். நாளடைவில், மகேஷும் தீபிகாவும் விரும்பினர். மயில்ராவணனையும் சுதா ராணியை பிரிக்க முயற்சி செய்தான் மகேஷ். மகேஷும் தீபிகாவும் எவ்வாறு காதலில் வெற்றிபெற்றனர் என்பதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு

இந்தத் திரைப்படத்தின் பின்னணி மற்றும் 6 பாடல்களுக்கு இசை அமைத்திருந்தார் பரத்வாஜ்.

தயாரிப்பு

சென்னை, மும்பை, பெங்களூரு, ஆஸ்ட்ரியா, இத்தாலி போன்ற இடங்களில் காட்சிகளும், ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, மும்பை ஆலப்புழா போன்ற இடங்களில் பாடல்களும் படமாப்பட்டன.[1]

வரவேற்பு

இயக்குனரின் முந்தய படங்களை போல் இல்லாவிட்டாலும், இளைஞர்களை கவரும் வண்ணம் படம் அமைந்திருந்ததாகவும், விறுவிறுப்பான திரைக்கதை, கதைக்களம் நன்றாக இருந்ததாகவும், பட இறுதியில் திடீர் சண்டை காட்சிகள் இருந்ததாகவும், விமர்சனம் செய்யப்பட்டது.[2][3][4]

பாக்ஸ் ஆபீஸ்

எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்ற இப்படம், தோல்விப் படமாக பின்னர் கருதப்பட்டது.

வெளி-இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "http://www.chennaionline.com".
  2. "http://www.thiraipadam.com".
  3. "https://www.thehindu.com/".
  4. "https://www.indiaglitz.com".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.