இண்டைட்டு
இண்டைட்டு (Indite) என்பது FeIn2S4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இண்டியம்-இரும்பு சல்பைடு கனிமமான இது மிகவும் அரிய கனிமமாகும்.
இண்டைட்டுIndite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சல்பைடு கனிமம் தயோசிபைனல் தொகுதி சிபைனல் கட்டமைப்புத் தொகுதி |
வேதி வாய்பாடு | FeIn2S4 |
இனங்காணல் | |
நிறம் | கருப்பு |
படிக இயல்பு | பொதிவு, மணிகள் |
படிக அமைப்பு | கனசதுரம் |
மோவின் அளவுகோல் வலிமை | 5 |
மிளிர்வு | உலோகம் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 4.67 |
மேற்கோள்கள் | [1][2][3] |
நீர்வெப்பப் படிவுகளில் கேசிட்டரைட்டு கனிமத்திற்குப் பதிலாக இது தோன்றுகிறது. திசாலிண்டைட்டு, கேசிட்டரைட்டு, குவார்ட்சு போன்ற கனிமங்களுடன் இண்டைட்டு கனிமம் கலந்து காணப்படுகிறது [1][2]. உருசியாவின் தூரக்கிழக்கு பிரதேசம் கபரோவ்சுக் பிரதேசம், சீனாவின் லெசர் கின்கான் மலைத்தொடர், திசாலிண்டா வெள்ளீயப் படிவுகள் போன்ற பகுதிகளில் காணப்பட்டதாக 1963 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது [4].
மேற்கோள்கள்
- Emsley, John. Nature's Building Blocks. Oxford, 2001. ISBN 0-19-850341-5
- Schwarz-Schampera, Ulrich; Herzig, Peter M. (2002-06-10). Indium: Geology, Mineralogy, and Economics. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-43135-0. https://books.google.com/books?id=k7x_2_KnupMC&pg=PA1&dq=Indite+indium.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.