இசுடீவன் இலோவென்

இக்யெல் இசுடீபன் இலோவென் (Kjell Stefan Löfven, பிறப்பு: 21 சூலை 1957) சுவீடிய அரசியல்வாதியும் தற்போது சுவீடனின் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளவரும் ஆவார். 2012 முதல் சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும் சுவீடிய எதிர்கட்சித் தலைவராகவும் இருந்து வந்துள்ளார். தமது வாழ்க்கையை ஓர் பற்ற வைப்போராகத் துவங்கிய இலோவென் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கேற்று விரைவிலேயே சுவீடனின் தொழிற்சங்க அமைப்பான ஐஎஃப் மெட்டலுக்குத் தலைவரானார்; 2006 முதல் 2012 வரை இப்பொறுப்பில் இருந்தார்.[1][2]

இசுடீவன் இலோவென்
33வது சுவீடன் பிரதமர்
அறிவிப்பு
பதவியேற்பு
அக்டோபர் 2014
முன்னவர் பிரெடெரிக் ரீன்பெல்ட்
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
27 சனவரி 2012
பிரதமர் பிரெடெரிக் ரீன்பெல்ட்
முன்னவர் ஆகன் யுகோல்ட்
பின்வந்தவர் அறிவிக்கப்படவில்லை
தலைவர்,
சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
27 சனவரி 2012
முன்னவர் ஆகன் யுகோல்ட்
ஐஎஃப் மெட்டல் தொழிற்சங்கத் தலைவர்
பதவியில்
1 சனவரி 2006  27 சனவரி 2012
முன்னவர் புதிய அலுவலகம்
பின்வந்தவர் ஆன்டெர்சு பெர்பெ
தனிநபர் தகவல்
பிறப்பு 21 சூலை 1957 (1957-07-21)
ஸ்டாக்ஹோம், சுவீடன்
அரசியல் கட்சி சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) உல்லா இலோவென்
படித்த கல்வி நிறுவனங்கள் உமீயா பல்கலைக்கழகம்
கையொப்பம்

2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தாம் முன்னின்று வழிநடத்திய சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சிக்கு 31.3% வாக்குகள் கிடைத்த நிலையில் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு பெற்றுள்ளார். சுவீடனின் பசுமைக் கட்சியினருடனும் மற்றபிற "இனவாத-எதிர்ப்பு" கட்சிகளுடனும், கூட்டணி அமைத்து அரசு அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

மேற்சான்றுகள்

  1. "Ordförandens sida" (Swedish). IF Metall. பார்த்த நாள் 26 சனவரி 2012.
  2. "Trade Union leader new chairman of the Social Democrats - Stockholm News". பார்த்த நாள் 13 செப்டம்பர் 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.