ஆள்களப் பெயர்

ஆள்களப் பெயர் (ஆங்கிலம்: Domain Name) என்பது இணையத்தில் நிருவாக அதிகாரம், கட்டுப்பாடு என்பனவற்றை வரையறுக்கும் முகமாக உருவாக்கப்பட்ட சரம் ஆகும். களப் பெயர் முறைமையின் விதிகளை அடிப்படையாகக் கொண்டு ஆள்களப் பெயர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.[1] காம், நெட், ஆர்க் மற்றும் நாடுகளுக்கான இணைய ஆள்களப் பெயர்கள் முதல் நிலை ஆள்களப் பெயர்களாகும்.[2]

ஆள்களப் பெயரின் வேறுபட்ட நிலைகள்

நோக்கம்

மனிதர்கள் வலைக் கடப்பிடங்களின் பெயர்களை இலகுவாக நினைவில் வைத்திருப்பதற்கு ஆள்களப் பெயர்கள் உதவுகின்றன. புரவன் பெயரையும் ஆள்களப் பெயரையும் இணைத்து இணையத்தள முகவரிகள் உருவாக்கப்படுகின்றன. புரவன் பெயர் உரலியில் ஒரு பகுதியாகக் காணப்படும் (உ-ம்: தளம்.ஆள்களமையம்.இலங்கை).[3]

வரலாறு

களப் பெயர் முறைமை 1980ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[4]

ஆள்களப் பெயர் வெளி

இன்று இணைய ஆள்களப் பெயர் வெளியை ஐ.சி.ஏ.என்.என். என்ற நிறுவனம் கட்டுப்படுத்துகின்றது.[5]

ஆள்களப் பெயர் தொடரியல்

ஆள்களப் பெயர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளைக் கொண்டிருக்கும். அவற்றினிடையே தளம்.ஆள்களமையம்.இலங்கை என்றவாறு புள்ளிகள் பயன்படுத்தப்படும்.

  • வலப்புறத்திலுள்ள பகுதி முதல் நிலை ஆள்களப் பெயரைக் குறிக்கும். உதாரணமாக, தளம்.ஆள்களமையம்.இலங்கை என்பதில் .இலங்கை என்பது இலங்கைக்கான முதல் நிலை ஆள்களப் பெயரைக் குறிக்கும்.
  • உப ஆள்களப் பெயர்கள் முதல் நிலை ஆள்களப் பெயருக்கு வலப்புறத்தில் இருக்கும்.[6]

முதல் நிலை ஆள்களப் பெயர்கள்

com, net, org போன்ற முதல் நிலை ஆள்களப் பெயர்கள் இணையத்திலுள்ள ஆள்களப் பெயர்களுள் உயர் நிலையில் உள்ளவையாகும்.[7] நாடுகளுக்கான முதல் நிலை ஆள்களப் பெயர்கள் ஐ. எசு. ஓ.-3166இற்கேற்ப ஆங்கிலத்தில் இரண்டு வரியுருக்களில் அமைந்திருக்கும்.[8] தற்போது இலங்கை, இந்தியா என்றவாறு தமிழ் மொழியிலும் ஏனைய மொழிகளிலும் ஆள்களப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.[9]

சர்வதேசமயப்படுத்தப்பட்ட ஆள்களப் பெயர்கள்

களப் பெயர் முறைமையானது அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறையை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே, ஒருங்குறியில் அமைந்த இணையத்தள முகவரிகள் அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறைக்கு மாற்றப்படும். உதாரணமாக தளம்.ஆள்களமையம்.இலங்கை என்பது xn--rlcuo9h.xn--wkc4axeaevb3oqbg.xn--xkc2al3hye2a என்று மாற்றப்பட்டுள்ளது.

ஆள்களப் பெயர் பதிவு

வரலாறு

முதலாவது வர்த்தகம் சார்ந்த ஆள்களப் பெயரான symbolics.com என்பது சிம்பாலிக்ஸ் நிறுவனத்தால் 1985ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி பதிவு செய்யப்பட்டது.[10]

நிருவாகம்

ஆள்களப் பெயர் பதிவானது ஐ. சி. ஏ. ஏ. என். என்னும் நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றது.[11]

மேற்கோள்கள்

  1. களப் பெயர் முறைமைச் சிட்டைகள், பெயர்கள் மற்றும் தொடரியல் விதிகள் (ஆங்கில மொழியில்)
  2. முதல் நிலை ஆள்களப் பெயர்கள் பட்டியல் (ஆங்கில மொழியில்)
  3. ஓர் உரலியின் பகுதிகள் (ஆங்கில மொழியில்)
  4. பால் மோகபெட்ரிஸ் (ஆங்கில மொழியில்)
  5. ஐ. சி. ஏ. என். என். என்ன செய்கிறது (ஆங்கில மொழியில்)?
  6. உப ஆள்களப் பெயர் என்றால் என்ன? ஓர் உப ஆள்களப் பெயரை எப்படி உருவாக்குவது (ஆங்கில மொழியில்)?
  7. முதல் நிலை ஆள்களப் பெயர்கள் என்றால் என்ன (ஆங்கில மொழியில்)?
  8. நாடுகளின் பெயர்களும் பரிபாடை மூலகங்களும் (ஆங்கில மொழியில்)
  9. இலங்கை ஆள்களப் பதிவகம் (தமிழில்)
  10. Symbolics.com (ஆங்கில மொழியில்)
  11. இணையத்தில் ஐ. சி. ஏ. என். என்.னின் பங்கினதும் வேலையினதும் விளைவு என்ன (ஆங்கில மொழியில்)?
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.