.இலங்கை

.இலங்கை (ஆங்கிலம்: .lk, சிங்களம்: .ලංකා) என்பது இலங்கைக்கான இணையத்தின் அதியுயர் ஆள்களப் பெயராகும். இந்த ஆள்களப் பெயரை இலங்கை ஆள்களப் பதிவகம் மூலம் பெறலாம். இந்த ஆள்களப் பெயர் 2010ஆம் ஆண்டு சூலை 22ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இலங்கையில் அல்லாத பன்னாட்டு நிறுவனங்கள் இதை பதிவுசெய்யவேண்டும் எனின் அவர்களிடம் இலங்கையில் ஓர் தொடர்பாடல் முகவரி இருத்தல் வேண்டும் அல்லது முகவர்களூடாகவோ அல்லது சட்ட நிறுவனங்களூடாகவோ மேற்கொள்ளலாம்.

.lk
அறிமுகப்படுத்தப்பட்டது 1990
அ. ஆ. பெ. வகை Country code top-level domain
நிலைமை Active
பதிவேடு மொரட்டுவப் பல்கலைக்கழகம்
வழங்கும் நிறுவனம் Council for Information Technology
பயன்பாட்டு நோக்கம் இலங்கைடன் தொடர்புடைய அமைப்புக்கள் அல்லது நிறுவனங்கள்.

actualuse=இலங்கையில் ஓரளவு பிரபலமானது

பதிவு கட்டுப்பாடுகள் உள்ளூர் பிரச்சன்னம் தேவையானது; இந்தப் பெயரைப் பதிவுசெய்வதற்குரிய காரணங்கள் தெளிவாகக் குறிப்பிடுதல் வேண்டும்.; சில் மூன்றாம் நிலைப் பெயர்கள் வகைரீதியாகக் கட்டுப்படுத்தப் பட்டுள்ளன.
கட்டமைப்பு பதிவுகளை இரண்டாம் நிலையில் பதிவுசெய்யலாம் அல்லது மூன்றால் நிலையில் இரண்டாம் நிலையில் இருந்து மேற்கொள்ளலாம்.
ஆவணங்கள் பதிவு முறைகள் (Policy)
பிணக்கு கொள்கைகள் ஐ. டி. என். கொள்கை

website=nic.lk

வலைத்தளம் {{{website}}}

சிறப்பம்சங்கள்

இந்த ஆள்களப் பெயரானது தமிழ் மொழியிலே அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதனால் தமிழ் மொழியில் இணையத்தள முகவரிகளைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. .இலங்கை என்னும் ஆள்களப் பெயருடன் அமையும் இணையத்தள முகவரிகளில் ஒருங்குறி எழுத்துரு பயன்படுத்தப்படுகின்றது.[2]

இரண்டாம் நிலை டொமைன்கள்

கீழ்வரும் டொமைன்கள் இலங்கையில் பாவனையில் உள்ளன.

கட்டுப்பாடுள்ளது

  • .gov.lk - இலங்கையின் அரச திணைக்களங்களுக்கும் மற்றும் அரச இணையத்தளங்களும்.
  • ..sch.lk - இலங்கையில் பதிவு செய்யப்பட்ட பாடசாலைகள்.
  • .net.lk - இலங்கையில் பதிவு செய்யப்பட்ட இணைய சேவை வழங்குனர்கள்.

கட்டுப்பாடற்றது

  • .com.lk - வணிக நிறுவனங்கள்
  • .org.lk வர்தகரீதியில்லாத நிறுவனங்கள்.
  • edu.lk - கல்வி சார் இணையத்தளங்கள்
  • .ngo.lk - அரசு அல்லாத அமைப்புக்கள் (இலங்கைத் தமிழ்: அரச சார்பற்ற அமைப்புக்கள்)
  • .sco.lk - பதிவு செய்யப்பட்ட சமூகங்கள்.
  • .web.lk - இணையத்தளங்கள்.
  • .ltd.lk - பதிவுசெய்யப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்கள்.
  • .grp.lk - குழு அல்லது கூட்டு நிறுவனங்கள்.
  • .hotel.lk - ஹோட்டல்கள்.

எடுத்துக்காட்டுகள்

நுட்பம் என்ற நிறுவனம் "தளம்.நுட்பம்.இலங்கை" என்ற தளத்தை வெளியிட்டுள்ளது. எடியுலங்கா என்ற நிறுவனம் "எடியுலங்கா.இலங்கை" என்ற தளத்தில் சேவைகளை வழங்குகிறது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.