ஆளுமை உளவியல்

ஆளுமை உளவியல் (Personality psychology) என்பது ஆளுமை பற்றியும் தனிநபர்களிடையே அதனுடைய வேறுபாடுகள் பற்றியும் ஆராயும் உளவியற் கிளையாகும். இதனுடைய பரப்புக்கள் பின்வருவனவற்றைக் கருத்திற் கொண்டது:

  • ஒரு தனிநபரின் ஒத்திசைவான படத்தையும் அவருடைய முக்கிய உளவியல் செயல்முறையையும் கட்டுதல்
  • தனிநபரின் உளவியல் வேறுபாடுகளை விசாரணை செய்தல்
  • மனித இயல்பையும் தனிநபர்கள் இடையேயான உளவியல் ஒற்றுமைகளையும் விசாரணை செய்தல்

"ஆளுமை" ஒரு நபர் மூலம் செயலாற்றும் திறனும் பண்புகளின் ஒழுங்கமைக்கப்பட்ட தொகுப்பாக, பல்வேறு சூழ்நிலைகளில் தங்கள் சூழல்கள், அறிதிறன்கள் , உணர்ச்சிகள், ஊக்கங்கள், நடத்தை அறிவியல்கள் என்பவற்றில் செல்வாக்குச் செலுத்துகிறது. "ஆளுமை" என்பதற்கான ஆங்கிலப் பதமான "personality" என்பது இலத்தீன் சொல்லான பேர்சொனா (persona) என்பதிலிருந்து உருவானது. மூல இலத்தீன் சொல் முகமூடி என்ற பொருளைக் கொண்டது.

மேலும், சிந்தனையின் உருமாதிரி, உணர்வுகள், சமூக இணக்கங்கள், நடத்தைகள் என்பவற்றையும் ஆளுமை குறிப்பதோடு, காலப்போக்கில் உறுதியாக வெளிக்காட்டியதுடன், ஒருவரின் எதிர்பார்ப்பு, சுய உணர்வுகள், மதிப்புகள் ஆகியவற்றில் மிகவும் செல்வாக்குச் செலுத்துகிறது. மேலும், இது மற்றவர்களிடம் மனித எதிர்ச்செயல், பிரச்சனைகள், மன அழுத்தம் ஆகியவற்றையும் கணித்துள்ளது.[1][2]

உசாத்துணை

  1. Winnie, J.F. & Gittinger, J.W. (1973) An introduction to the personality assessment system. Journal of Clinical Psychology, Monograph Supplement, 38,1=68
  2. Krauskopf, C.J. & Saunders, D.R, (1994) Personality and Ability: The Personality Assessment System. University Press of America, Lanham, Maryland

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.