ஆலவிளாம்பட்டி

ஆலவிளாம்பட்டி (Alavilampatti), தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் வட்டத்தில் அமைந்துள்ளது. சிவகங்கை நகரத்திற்கு கிழக்கே 18 கீமீ தொலைவில் உள்ள காளையார்கோயில் ஊராட்ச ஒன்றியத்தில் உள்ள கொட்டகுடி ஊராட்சியில் ஆலவிளாம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. ஆலவிளாம்பட்டு கிராமத்தின் அஞ்சல் சுட்டு எண் 630313 மற்றும் தொலைபேசி குறியீடு எண் 04575 ஆகும். இக்கிராமத்தின் அஞ்சலகம் செம்பனூர் ஊராட்சியில் உள்ளது.[1]

கிராமச் சிறப்புகள்

ஆலவிளாம்பட்டி கிராம மக்கள் கடந்த 500 ஆண்டுகளாக திருமணத்தின் போது வரதட்சணை வாங்குவதும், தருவதும் இல்லை. மேலும் இக்கிராமத்தினர் சீட்டு விளையாடுதல், புகை பிடித்தல் மற்றும் மது அருந்துவதில்லை. மீறினால் பெருந்தொகை அபராதம் விதிக்கப்படுகிறது. [2]

மேற்கோள்கள்

  1. Alavilampatti
  2. Alavilampatti - Puthiya Thalaimurai TV - காணொலி

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.