ஆலன் ஜோ. பார்டு

ஆலன் யோசப் பார்டு (Allen Joseph Bard, பிறப்பு: 18 திசம்பர் 1933) ஓர் அமெரிக்க வேதியியலாளர். இவர் ஆசுட்டீனில் உள்ள டெக்சாசு பல்கலைக்கழக மின்வேதியியல் மைய இயக்குனரும் ஏக்கர்மேன்-வெல்ச் உயராய்வுக் கட்டில் வேதியியல் பேராசிரியரும் ஆவார்.[1] இவர் மின்வேதி அலகீட்டு நுண்ணோக்கியின் கண்டுபிடிப்பாளரும் மின்வேதி ஒளிர்வின் இணைக் கண்டுபிடிப்பாளரும் ஆவார். குறைக்கடத்தி மின்வாயிகள் சார்ந்த ஒளிமின் வேதியியல் ஆய்வுக்கு முதன்மையான பங்களிப்பைச் செய்துள்ளார். இவர் ஒரு துறைநூலின் இணையாசிரியரும் ஆவார்.[2]

ஆலன். ஜெ. பார்ட்
Allen J. Bard
2014 இல் ஆலன் பார்டு
பிறப்புதிசம்பர் 18, 1933 (1933-12-18)
நியூயார்க் நகரம்
தேசியம்அமெரிக்கர்
துறைவேதியியல்
பணியிடங்கள்டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்)
கல்வி கற்ற இடங்கள்நியூயார்க் நகரக் கல்லூரி
ஹார்வர்டு பல்கலைக்கழகம்
விருதுகள்லினசு பவுலிங் விருது (1998)
பிரீஸ்ட்லி பதக்கம் (2002)
ஊல்ஃபு பரிசு (2008)
அறிவியலுக்கான தேசிய விருது (2011)
என்ரிக்கோ பெர்மி விருது (2013)

இளம்பருவமும் கல்வியும்

ஆலன் ஜோ. பார்டு 1933 திசம்பர் 18இல் நியூயார்க் நகரத்தில் பிறந்தார். இவர் பிராங்சு அறிவியல் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். நியூயார்க் நகரக் கலூரியில் 1955இல் பட்டம் பெற்றார். பிறகு இவர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1956இல் முதுவர் பட்டமும் 1958இல் முனைவர்ப்பட்டமும் பெற்றார்.

சொந்த வாழ்க்கை

இவர் பிரான் பார்டைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு எட், சாரா என இருமக்கள் உண்டு. அலெக்சு, மாரி, இரேச்சல், ட்ய்லான் என நான்கு பேரன், பேத்திகள் உள்ளனர்.

விருதுகள்

இவர் 2002இல் பிரீசுட்லீ விருதைப் பெற்றார்.[3] மேலும் 2008இல் வேதியியலுக்கான வுல்ஃப் விருதினைப் பெற்றார்.[4] இவர் அமெரிக்கக் கலை, அறிவியல் கல்விக்கழகத்தில் 1990இல் ஆய்வு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] 1982இல் தேசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.