ஆந்திரேய் இலிந்தே
ஆந்திரேய் திமித்ரியேவிச் இலிந்தே (Andrei Dmitriyevich Linde) (உருசியம்: Андре́й Дми́триевич Ли́нде; பிறப்பு: மார்ச்சு 2, 1948) ஓர் உருசிய-அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். இவர் சுடேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் அரால்டு டிரேப் ஃபிரிலிசு இயற்பியல் அறக்கட்டளைப் பேராசிரியர் ஆவார். இலிந்தே அண்ட உப்பல் கோட்பாட்டளர்களில் ஒருவர். இவர் தொடர்து விரிவடைந்துனுப்பிடும் பல்லண்டக் கோட்பாளரும் ஆவார். இவர் தன் அறிவியல் இளவல் பட்ட்த்தை மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பெற்றார்.இவர் மாஸ்கோ இலெபிதேவ் இயற்பியல் நிறுவனத்தில் 1975 இல் முனைவர் பட்டம் பெற்றார். இவர் 1989 இல் இருந்து ஐரோப்பிய அணுக்கரு ஆராய்ச்சி நிறுவனத்தில் (செர்ன்) பணிபுரிந்தார். பின்னர் இவர் 1990 இல் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து சுடேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியரானார். இவர் அண்ட உப்பல் கோட்பாட்டுக்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2002 இல் இவர் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆலன் குத், பிரின்சுடன் பல்கலைக்கழகத்தின் பவுல் சுடீன்கார்த்ஆகிய இருவருடன் இணைந்து டிரேக் பதக்கத்தைப் பெற்றார். இவர் 2004 இல் ஆலன் குத்துடன் இணைந்து உப்பல் அண்டக் கோட்பாட்டு உருவாக்கத்துக்காகக் குரூபர் அண்டவியல் பரிசைப் பெற்றார். இவர் 2012 இல், ஆலன் குத்துடன் இணைந்து முதலடிப்படை அறிவியல் பரிசைப் பெற்றார். அண்ட உப்பல் கோட்பாட்டை முன்னோடியாக உருவாக்கியதற்காகக் காவ்லி வானியற்பியல் பரிசை 2014 இல் ஆலன் குத்துடனும் அலெக்சிய் சுதாரோபின்சுகியுடனும் இணைந்து பெற்றார்.
ஆந்திரேய் இலிந்தே Andrei Linde | |
---|---|
![]() | |
பிறப்பு | மார்ச்சு 2, 1948 மாஸ்கோ, உருசிய சோவியத் அமைப்பு, சோவியத் ஒன்றியம் (இப்போது உருசிய கூட்டரசு) |
குடியுரிமை | அமெரிக்கர் |
துறை | வார்ப்புரு:Br list |
பணியிடங்கள் | வார்ப்புரு:Br list |
கல்வி கற்ற இடங்கள் | மாஸ்கோ அரசு பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | டேவிட் கிர்ழ்னித்சு |
அறியப்படுவது | அண்ட உப்பல் |
விருதுகள் | வார்ப்புரு:Br list |
துணைவர் | இரேனதா கல்லோழ்சு |
சொந்த வாழ்க்கை
இலிந்தே இரேனதா கல்லொழ்சுவை மணந்தார். Tஇவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு.[1]
மேற்கோள்கள்
- "Renata Kallosh". UCLA. பார்த்த நாள் March 17, 2014.
வெளி இணைப்புகள்
- Andrei Linde's webpage at Stanford University.
- Linde, Andrei (2004) "Inflation, Quantum Cosmology and the Anthropic Principle" in John Barrow, Paul C W Davies, and C L Harper, eds., Science and Ultimate Reality: From Quantum to Cosmos, a volume honoring John A. Wheeler's 90th birthday. Cambridge University Press.
- Slack, Gordy (1998) "Faith in the Universe: Conversations with cosmologists," California Wild 51(3). Mentions Linde's views on religious belief.
- Andre Linde Radio Interview on Entitled Opinions
- Scientific publications of Andrei Linde on INSPIRE-HEP