ஆஸ்திரோனீசிய மொழிகள்
ஆத்திரனேசிய மொழிக்குடும்பம் என்பது தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தீவுகளிலும் பசிபிக்கு தீவுகளிலும் பேசப்படுகிற ஒரு மொழிக்குடும்பம் ஆகும். இம்மொழிக்குடும்ப மொழிகளை ஏறத்தாழ 380 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். மலாய் மொழியும் சாமிக்கு மொழிகளும் இம்மொழிக் குடும்பத்தையே சேரும். சில ஆத்திரனேசிய மொழிகள் ஆட்சி மொழிகளாகவும் உள்ளன. இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பம், நைகர்-காங்கோ மொழிக்குடும்பம், ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பம், யூரலிய மொழிக்குடும்பம் (Uralic) போன்று இந்த ஆத்திரனேசிய மொழிக்குடும்பமும் நன்றாக நிறுவப்பட்ட பழைய மொழிக்குடும்பம் ஆகும். ஓட்டோ தெம்புவுஃபு (Otto Dempwolff) என்னும் இடாய்ச்சு (செருமானிய) மானிடவியல் மற்றும் மொழியியல் அறிஞரே முதன்முதலாக ஒப்பீட்டு ஆய்வு முறையில் இம்மொழிகளை விரிவாக 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆய்ந்தார். பின்னர் வில்லெம் இசுமிட்டு (Wilhelm Schmid) என்னும் மற்றொரு இடாய்ச்சு அறிஞரே தென்றல் (தெற்கு திசைக் காற்று) என்னும் பொருள் படும் அவுசிட்டர் (auster) என்னும் சொல்லோடு தீவு எனப்பொருள்படும் கிரேக்கச் சொல்லான நெசோசு (nêsos) என்பதையும் இணைத்து இடாய்ச்சுச் சொல்லாகிய அவுசிட்ரோனேசிழ்சு (austronesisch) என்பதை உருவாக்கி இம்மொழிக்குடும்பத்தைக் குறித்தார். இது பின்னர் ஆங்கிலத்தில் Austronesian எனவும் தமிழில் ஆத்திரனேசிய மொழிக்குடும்பம் எனவும் பெயர் பெறுகின்றது.
ஆத்திரனேசியம் | ||
---|---|---|
புவியியல் பரம்பல்: |
கடல்சார் தென்கிழக்காசியா, ஓசானியா, மடகாசுக்கர், தாய்வான் | |
வகைப்பாடு: | உலகின் முக்கிய மொழிக் குடும்பங்களுள் ஒன்று; பிற மொழிக் குடும்பங்களுன் தொடர்புகள் இருப்பதாகக் காட்டும் சில ஆய்வுகள் இருந்தாலும் இது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. | |
துணைப்பிரிவுகள்: |
போர்மோசம் (several primary branches)
மலாய-பொலினீசியம் (போர்மோசத்தின் ஒரு கிளையாக இருக்கலாம்)
| |
ISO 639-2: | map | |
![]() மலாய-பொலினீசிய மொழிகளின் முக்கிய கிளைகள்: போர்னியோ-பிலிப்பைன்சு (புற மேற்கத்திய மலாய-பொலினீசியம்)
சுன்டா-சுலவேசி (உள் மேற்கத்திய மலாய-பொலினீசியம்)
நடு மலாய-பொலினீசியம் (பந்தனீசியம்)
South Halmahera–West New Guinea languages (South Halmahera–Geelvink Bay)
Oceanic ![]() The branches of the Oceanic languages: Admiralties and Yapese
சென் மத்தியாசு
Western Oceanic & Meso-Melanesian
Temotu
Southeast Solomons
Southern Oceanic
Micronesian
Fijian-Polynesian
The black ovals at the northwestern limit of Micronesian are the Sunda-Sulawesi languages Palauan and Chamorro. The black circles in with the green are offshore Papuan languages. |